விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு ஜியோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு மடல் எழுதியுள்ளார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதாரணமாக இணைய வாசி குமரி கிழவானார் தனது முக நூல் பதிவில்:
குமரிப்பகுதியில் உள்ள ஐயாவழி பதியை அபகரிக்க ரொம்ப நாளா திட்டம் போடும் ஒன்றியம் இதே திட்டத்தோடுதான் களம் இறங்கியது.
இதை குமரி இயற்கை ஆர்வலர்கள் மிக கடுமையாக எதிர்த்தனர் அவர்களை தேசதுரோகிகள் என பாசக நோட்டீசு அடித்து ஒட்டியது
இந்த இடத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 75 கிமீ அனந்தபுரத்திற்கு 65 கிமீ 150 கிமீட்டருக்குள் மூன்று விமானநிலையம் யாருடைய தேவைக்கு….?
மக்கள் வரிப்பணத்தை வீணாக்கவா…..?
தங்க நாற்கர சாலை பணி முற்றுபெற்றால் ஒரு மணிநேரத்தில் அனந்தபுரமும் ஒரு மணிநேரத்தில் தூத்துக்குடி விமானநிலையமும் இதை விட வேகமாக பறக்க குமரியானுக்கு என்ன தேவை வந்ததது?
மூன்றில் ஒரு பங்கு மட்டுமே மக்கள் வாழ தகுதியான நிலங்கள் உள்ள குமரியில் விமானநிலையம், துறைமுகம் போன்றவை பூர்வகுடிகளை நிலத்தை விட்டு வெளியேற்றி கார்ப்ரேட் முதலாளிகளை நிறுவ நடக்கும் முயற்சி என்பது ஏன் விளங்குவதில்லை பலருக்கும் என பதிவிட்டுள்ள அந்த பதிவில்
அண்ணனுக்கு ( திருமாவளவனுக்ல்கு ) யாரோ குமரி புவியியலை தவறாக சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.
பொன்னார் இதை முன்னெடுத்தபோதும் எதிர்த்தோம் வசந்தகுமார் அண்ணாச்சி இதை பேசியபோதும் எதிர்த்தோம் இன்று திருமாவோ நாளை சீமானோ யார் இதை பேசினாலும் எதிர்ப்போம் என பதிவிட்டு உள்ளார்.