Author: Admin

இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. நான் சொன்ன ராம். எங்கிருந்து வந்தான் என்பது அவனுக்கே தெரியாது. ஏதோ வெள்ளம் அதிலிருந்து மீண்டதாக சொன்னான். 

Read More

எதிர்பாராத இடத்தில், நேரத்தில் கிடைக்கும் சிறிய ஆதரவும் பெரு நம்பிக்கையை தருகிறது. ‘மனிதன் எப்படி பார்த்தாலும் மனிதன் தான்’ என்று ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது இதைத்தான் போலும். 

Read More

செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மோடி அரசு மும்முரமாக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு முன்னதாக பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, எடியூரப்பா, ராவத் ஆகியோர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தனர். இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது என குறிப்பிட்டார். அவர்கள் செயல்படாத முதல்வர்கள் என்பதை பாஜக தலைமை எப்போது உணர்ந்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எடியூரப்பா, ராவத் மற்றும் ரூபானி பல மாதங்களாக செயல்படவில்லை என்பது அந்தெந்த மாநில மக்களுக்கு தெரியும் என குறிப்பிட்டார். அவர், மாற்ற வேண்டிய முதல்வர்கள் பட்டியல் ஹரியானா, கோவா, திரிபுரா என பட்டியல் இன்னும் நிறைய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், 3-வது திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.ஏற்கனவே 2 திருமண செய்து அந்த மண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இதனையடுத்து, 2008-ம் ஆண்டு முதல் தமது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில், பிரிட்னி ஸ்பியர்ஸ் வாழ்ந்து வந்தார். தனது நீண்டகால காதலரான சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொள்ள அவரது தந்தை அனுமதி மறுத்துள்ளார். இந்நிலையில், தமது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேற, பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு அனுமதி வழங்கி சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கும், சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இது தொடர்பாக காதலர்கள் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

Read More

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இறகுப்பந்து விளையாட்டு கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி அமைந்துள்ளது. அங்கு ரூ. 4.29 கோடி மதிப்பில் இறகுப்பந்து விளையாட்டுக் கூடம் உள்ளிட்டப்வை அமைக்கப்பட்டுள்ளன. இறகுப்பந்து விளையாட்டுக் கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மைதானத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் முதல்வர் ஸ்டாலின் இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

Read More

இந்த பரிக்ரமா செய்கிற போது நீங்கள் காலில் காலணி அணிதல் கூடாது. கையில் பணம் கூடாது. சாப்பாட்டுக்கு பிச்சை எடுத்து மட்டுமே உண்ண வேண்டும்

Read More

சூயஸ் கால்வாயில் கோரல் கிறிஸ்டல் எனும் சரக்கு கப்பல் மீண்டும் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது. இந்த கால்வாயில், கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாகத் தரை தட்டி நின்றது. இதன் காரணமாக, சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது கிட்டத்தட்ட ஒரு வாரக் கால முயற்சிக்குப் பிறகு, ‘எவர்கிவன்’ கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் கப்பல் தரை தட்டி நின்ற காரணத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வழங்கும் வரை கப்பலை விட மாட்டோம் என ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளரான ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசென் கைஷாவிடம், சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தது. சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க, ‘எவர்கிவன்’ கப்பலின்…

Read More

இந்திய அணியின் புதிய கேப்டன் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி பிசிசிஐ விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அவருக்கு அடுத்தாக ரோகித் ஷர்மா இந்தியாவின் டி20 கிரிக்கெட் கேப்டனாக செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தனர். இந்த மாற்றம் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இருக்கும் எனவும் கூறப்பட்டது. இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதெல்லாம் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. இது ஒரு வதந்தி. அவ்வளவு தான். கேப்டன் பொறுப்பு விவகாரம் குறித்து எதுவும் கலந்தாலோசிக்க படவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி தான் இந்திய அணியின் கேப்டன் என அருண் துமால் தெரிவித்துள்ளார்.

Read More

தஞ்சையில் திமுகவினர் சிகரெட் கொடுக்க தாமதம் கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மன்னார்குடி – பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி கடையும், டீக்கடையும் நடத்தி வருகிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பிருந்தா நகரை சேர்ந்த மன்னார்குடி திமுக நான்காவது வட்டப் பிரதிநிதி பாண்டவர் , அவரது நண்பர்கள் மன்னார்குடி திமுக நகர இளைஞரணி அமைப்பாளர், முருகேசன், மற்றும் மன்னார்குடியை சேர்ந்த திமுக நிர்வாகிகளான சுரேஷ் பிரபு, இசையரசன் ஆகியோர் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற கறி விருந்துக்கு சென்று விட்டு சூரக்கோட்டையில் உள்ள ஒரு ஆற்றில் குளித்து விட்டு மன்னார்குடி பிரிவு சாலையில் உள்ள பேக்கரியில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது கடையில் இருந்த பெண் சிகரெட் கொடுக்க காலதாமதம் செய்ததால் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அந்தப் பெண்ணின் உடையை பிடித்து இழுத்ததாக…

Read More

அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் கொண்டாடத்தில் ஆட்டை பலியிட்டு அபிஷேகம் செய்த ரசிகர்களை கண்டிக்காத நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே தமிழகத்தில் ஏதோ ஒரு ஊரில் மோஷன் போஸ்டர் வெளியானதை கொண்டாடும் விதத்தில் ரஜினி கட் அவுட்டிற்கு ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக…

Read More