ஏன் துருக்கியில் மட்டும் நில நடுக்கம் அதிகம் ஏற்படுகின்றது ? – இதுதான் காரணமா?

SHARE

கடந்த கால் நூற்றாண்டாகவே துருக்கி பல்வேறு பயங்கர நில நடுக்கங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இப்போதும் துருக்கி உலகின் மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாக உள்ளது. துருக்கியின் கடந்தகாலமும் எதிர்காலமும் என்ன? – விரிவாகப் பார்ப்போம்.

துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புடைய நாடுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது அனடோலியன் புவித் தட்டில் அமைந்திருக்கிறது. இந்தத் தட்டு யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது.

இதனால் ஒரு பெரிய பூகம்பம் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாகவே எச்சரித்து வருகின்றனர்.

துருக்கியின் வரலாற்றில் மிக மோசமாக நிலநடுக்கம் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ஏற்பட்டது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகள் வரை பதிவானது. அதில் 17 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

2003ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 170 க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானது.

2011ஆம் ஆண்டு 7.2, 5.8 மற்றும் 5.6 ரிக்டர் அளவுகளில் துருக்கி நகரங்களைத் தாக்கிய மூன்று நிலநடுக்கங்களில் 600 பேருக்கு மேல் உயிரிழந்தார்கள்.

2020ஆம் ஆண்டில் 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் துருக்கியின் எல்சாயிக் நகரில் நிகழ்ந்தது. இதில் குறைந்தது 40 பேர் பலியானார்கள்.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பூகம்பத்தால் கொல்லப்பட்டார். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6-ஆக பதிவாகியுள்ளது

7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

துருக்கி, சிரியா இரு நாடுகளில் மொத்தமாக நிலநடுக்கத்தால் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன

மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது இரண்டு சதவீதமாக இருக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நிலநடுக்க அபாயத்தில் உள்ள துருக்கிக்கு எதிர்காலமும் அபாயமாகவே உள்ளதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

மாஸ்க் போடாத பிரதமருக்கு அபராதம்! – தாய்லாந்தில் சம்பவம்

அடுத்து இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுமா? விஞ்ஞானியின் கணிப்பால் அச்சம்!

Nagappan

தடுப்பூசி போடலைன்னா வேலையை விட்டு போங்க…அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

குழந்தையின் சிகிச்சைக்காக பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை.!!

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்: புதுடெல்லியில் கண்டுபிடிப்பு!

Admin

Leave a Comment