Author: Admin

9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்விதத் தேர்வும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவித்து உள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்கு முந்தைய 10 மாதங்கள் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஜனவரியில்தான் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறத் தொடங்கின. இந்த சூழலில் மாணவர்களுக்கு தேர்வுகள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், சமீபத்திய பேரவைக் கூட்டத் தொடரில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 9 முதல் 11 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘9 – 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் பட்டியலை உருவாக்க வேண்டும்’ -…

Read More

ஜெய்ப்பூர்: 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த 20 வயது இளைஞருக்கு போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன்ஜூனு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததற்காக கைது செய்யப்பட்டார். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காவல்துறை தரப்பில் குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அளிக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட இளைஞரும் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாதவராக வழக்கை எதிர்கொண்டார். வழக்கின் 26ஆவது நாளிலேயே விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், 27ஆம் நாளில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், இந்தக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் கண்களில் சிறுது கூட வருத்தம் காணப்படவில்லை. அவர் வருந்தி இருந்தால் தண்டனை வேறு விதமாக…

Read More

புது டெல்லி: தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் புதுடெல்லியில் கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனாவைப் பரப்பும் கோவிட் 19 வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையாக உருமாற்றங்களை அடைந்து வருகின்றது. இந்த உருமாற்றங்களினால் இந்த வைரஸ்சை ஒழிக்கும் நடவடிக்கைகள் கடினமாகி உள்ளன. இப்படி உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் நாடுகளிடையே எல்லை கடந்து பரவியும் வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருமாறிய கொரோனாவின் பரவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க நாட்டில் உருமாற்றம் பெற்ற புதிய வகைக் கொரோனா வைரஸ் ஒன்று இந்தியத் தலைநகர் டெல்லியில் 33 வயது இளைஞர் ஒருவரைத் தாக்கி உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ்சின் பாதிப்பும் டெல்லியில் சில நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் இருக்க வேண்டியதன் அவசியத்தை உருமாறிய கொரோனாவின் திடீர் படவல் நமக்கு உணர்த்துகிறது.…

Read More

புதுடெல்லி. கடந்த 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல். பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர்தான் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்பட்டன. தொடக்கத்தில் அதிகமாக மக்களிடம் புழங்கிய இந்த 2000 ரூபாய் வங்கித்தாள்களை சமீப காலங்களில் காணவே முடியவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ‘2000 ரூபாய் வங்கித்தாள்கள் மீண்டும் அச்சடிக்கப்படுகின்றவா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட, இந்தக் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமான விரிவான பதிலை அளித்தார். அதில், கடந்த 2016-17ஆம் ஆண்டில் 354 கோடியே 39 லட்சம் 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சடிக்கப்பட்டதாகவும், 2017-18ஆம் ஆண்டில் அது 11 கோடியே 15 லட்சமாகக் குறைக்கப்பட்டதாகவும் , 2018-19ல் அந்த எண்ணிக்கை இன்னும் குறைகப்பட்டு 4 கோடியே 666 லட்சம் 2000 ரூபாய் வங்கித்தாள்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 2019 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் கடந்த…

Read More

நமது நிருபர் தமிழக தலைமைச் செயலாளரும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்ற ஆலோசனையில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க உத்தரவு. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை விடவும் இந்தியாவில் மிகக் குறைவான பாதிப்பே ஏற்பட்டது. தமிழகத்திலும் படிப்படியாகக் குறைந்த கொரோனா பாதிப்பு பின்னர் தினந்தோறும் 500க்குக் குறைவானவர்களுக்கே பாதிப்பு என்ற நிலைக்கு வந்தது. ஆனால், சமீபத்திய நாட்களில் இந்த நிலை மாறி உள்ளது. மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 1.2% அதிகரித்தது. தமிழகத்தின் பெரு நகரங்களிதான் இந்த கொரோனா பரவல் விகிதம் பெரிதும் அதிகரித்து உள்ளது, கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வில் மக்கள் அலட்சியம் காட்டுவதே இந்த திடீர் அதிகரிப்புக்குக் காரணம் என நம்பப்படுகிறது. இது தொடர்பாகத் தமிழகத் தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலிக் காட்சி வாயிலாக…

Read More

நமது நிருபர். ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்த சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தின் படப் பிடிப்பு 2 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியது. ரஜினியின் நடிப்பில் இயக்குநர் சிறுத்த சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு படப் பிடிப்புகள் தொடங்கப்பட்ட திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் கீரித்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு எனப் பலரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். படத்தின் பணிகள் கடந்த டிசம்பரில் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, படக் குழுவில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படப் பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் கடந்த 2 மாதங்களாக அண்ணாத்த படம் தொடர்பான படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் ஹைதராப்பாத்திற்கு பதில் சென்னையிலேயே பெரிய செட்கள் போடப்பட்டு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகின்றது. இப்படியாக ஒரு மாதம் சென்னையிலேயே படப் பிடிப்பு தொடர்ந்து நடக்க உள்ளதாகவும்,…

Read More

சென்னை: நமது நிருபர். 9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை விடும் திட்டம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. கொரோனா தாக்கத்தால் சுமார் 10 மாதங்களாக முடங்கி இருந்த தமிழகத்தின் பள்ளிக் கூடங்கள் இந்த ஜனவரியில்தான் திறக்கப்பட்டன. தற்போது 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களில் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட ஆலோசனைகளில் மக்கள் முகக் கவசங்களைக் கட்டாயம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த சூழலால் 12ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து விடலாம் என்று ஆசிரியர் சங்கங்களும், பெற்றோர் ஆசிரியர் அமைப்புகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மறுபக்கம் விரைவில் 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர பிறருக்கு விடுமுறை அறிவிக்கப்படும்…

Read More

நமது நிருபர். நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப் போவதாக இயக்குநர் அறிவிப்பு. நடிகர் விக்ரம் நடிப்பில், இமைக்கா நொடிகள் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் இர்பான் பதான் தமிழுக்கு நடிகராக அறிமுகமாகிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மியா ஜார்ஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் இந்தத் திரைப்படத்தில் நடித்து உள்ளனர். இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்கள் முன்பு ரஷ்யாவில் நிறைவடைந்தது. தற்போது சென்னையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்தத் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், படம் மே மாதம் ரம்ஜான் திருநாளை ஒட்டி வெளியாகும் என்றே திரைப்படக் குழு கூறி வந்தது. ஆனால் பின்னணிப் பணிகள் அதற்குள் முடியாது என்ற நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாத்தில்தான் இருக்கும் என்று படத்தின் இயக்குநர்…

Read More

நமது நிருபர். நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் போஸ்டர் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் போனிகபூர் அறிவிக்க, அவரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் 60ஆவது படமான ’வலிமை’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் சமீப காலங்களில் வலிமை படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரிடமும் ‘வலிமை பட அப்டேட் என்ன?’ என்று கேட்டு வந்தனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ள தேதியை டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதில் அஜித்தின் 50ஆவது பிறந்தநாளான மே-1 அன்று படத்தின் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போனிகபூருக்கு பல்வேறு விதங்களில் நன்றி சொல்லி வருகின்றனர். அதிலும்…

Read More

நமது நிருபர். பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாலிவுட்டின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவரது படங்கள் நடிப்புக்கும் சமூக சிந்தனைக்கும் பெயர் பெற்றவை. இவரது லகான் படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவரது ரங் தே பசந்தி, தாரே ஜமீந் பர் – படங்கள் இந்தியாவை அதிர வைத்தன. இவரது கஜினி, பிகே – ஆகிய படங்கள் இந்திய வசூல் சாதனைகளை முறியடிக்க, இவரது தங்கல் திரைப்படம் உலக அளவில் வசூலை வாரிக் குவித்தது. இருந்தாலும் இவர் சமீபத்தில் நடித்த ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ திரைப்படத்தின் படுதோல்வி இவரைக் கடுமையாக பாதித்தும் இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று நடிகர் அமீர்கான் தனது 56ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதை இவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர். இந்நிலையில் இன்று…

Read More