ஆட்டத்துக்கு வந்த அண்ணாத்த… மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.

SHARE

நமது நிருபர்.

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்த சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தின் படப் பிடிப்பு 2 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியது.

ரஜினியின் நடிப்பில் இயக்குநர் சிறுத்த சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு படப் பிடிப்புகள் தொடங்கப்பட்ட திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் கீரித்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு எனப் பலரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

படத்தின் பணிகள் கடந்த டிசம்பரில் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, படக் குழுவில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படப் பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

அதற்குப் பின்னர் கடந்த  2 மாதங்களாக அண்ணாத்த படம் தொடர்பான படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் ஹைதராப்பாத்திற்கு பதில் சென்னையிலேயே பெரிய செட்கள் போடப்பட்டு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகின்றது. இப்படியாக ஒரு மாதம் சென்னையிலேயே படப் பிடிப்பு தொடர்ந்து நடக்க உள்ளதாகவும், படத்தைத் திட்டமிட்டபடி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய குழுவினர் முனைப்பு காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர.

அரசியலுக்கு முழுக்கு போட்ட ரஜினி காந்த் மீண்டும் திரைப்படத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளது திரைத்துறையினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கிருத்திகா உதயநிதியுடன் இணையும் காளிதாஸ்… நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் !! நலமுடன் இருப்பதாக விளக்கம்!!

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி காரணம் என்ன?

Admin

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

எனது பிரச்சினையை தீர்த்து வைத்தவர் இவர்தான் – உண்மையை போட்டுடைத்த வடிவேலு

Admin

முதலமைச்சர் அவர்களே ..பிரதமர் மோடி அவர்களே ..என்னைக் காப்பாற்றுங்கள்!’ – கதறிய மீரா மிதுன்!

Admin

சியான் படத்தில் சிம்ஹா: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

என்னப்பா.. Money Heist பார்க்கணுமா தாராளமா லீவு எடுத்துக்கோங்க : தாராளம் காட்டிய நிறுவனம்!

Admin

Leave a Comment