Author: Admin

தன்னை திருமணம் செய்வதாக கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி அளிக்கப்பட்ட புகாரில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார் திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகவும் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யக் கூறியதாகவும் இதனால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.இதனையடுத்து,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், நடிகை சாந்தினி பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது புகார் அளித்ததாகவும், அவர் மலேசியாவில் இதுபோல் மோசடி செய்ததாகவும், மருத்துவ உதவிக்காக தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை…

Read More

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இப்போட்டி நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் அங்கு பெய்த மழையின் காரணமாக டாஸ் கூட போடாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் களமிறங்கி நிதானமாக ஆடினர். இவர்களில் ரோகித் சர்மா 34 சுப்மன் கில் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா வெறும் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து கேப்டன் விராத் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் பொறுப்போடு ஆட்டத்தைத்…

Read More

உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும்போது உறைகளைக் கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதிப் பிரித்தல் போன்ற செயல்களை செய்யக் கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் மார்ச் 25, 2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் சில அத்தியாவசியச் செயல்பாடுகளுக்குத் தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளில் ஒன்றாக அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகைக் கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில், அந்தக் கடைகளிலும்…

Read More

தெலுங்கானாவில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் காதலித்து, இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணமும் செய்துள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தின் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்ஜுன் என்ற இளைஞர் ஒரே சமயத்தில் தனது அப்பாவின் சகோதரியான அத்தை மகள்களை ஒருவருக்கொருவர் தெரியாமல் ஏமாற்றி காதலித்து வந்துள்ளார். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள அர்ஜுனுக்கு சமீபத்தில் வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் குறித்த பேச்சை ஆரம்பிக்கும்போது, அத்தை மகள்கள் இருவரையும் காதலித்து ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில், ஏமாற்றினாலும் பரவாயில்லை ஏமாற்றிய இளைஞரைத்தான் திருமணம் செய்வேன் என்று இரண்டு பெண்களும் உறுதியாக இருந்ததால், ஒரே சமயத்தில் இருவரையும் திருமணம் செய்துள்ளார் அர்ஜுன்.  பழங்குடியினத்தில் இப்படி ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை மணப்பதற்கு அனுமதி உள்ளதால் எவ்வித எதிர்ப்புகளும் கிளம்பவில்லை. ஆனால் இணையத்தில் உள்ள 90 s kids களின் ஒட்டு மொத்த எதிர்ப்பினையும் சம்பாதித்துள்ளார் காதல் மன்னன் அர்ஜூன்.

Read More

நடிகர் விஜய்யை, திமுக ஆட்சியை தலைமை ஏற்க முதல்வர் அழைப்பது போல் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் திண்டுக்கலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.மே 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து கொரோனோ தடுப்பு பணி தொடங்கி பல்வேறு துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.இந்த சூழ்நிலையில் விஜயை வைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகரம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட ” தம்பி வா தலைமை ஏற்க வா” என மறைந்த முதல்வர் அண்ணா கலைஞரை அழைத்தது போல முதல்வர் செங்கோல் கொடுத்து திரைப்பட நடிகர் விஜயை திமுக கட்சிக்கு தலைமை தாங்க அழைப்பது போல் நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியை சமூக வலைதளங்களில்…

Read More

தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களின் பொருளாதார வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெட்ரோல்,டீசல் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், கடந்த வாரம் சிமெண்ட் செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையும் உயர்த்தப்படுவதாக கட்டுமான உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அந்த சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் தங்கம் தென்னரசு கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை விடுத்ததோடு, கட்டுமான பொருட்களின் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விலை உயர்வால் ஏழை,எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் எல்லோரும் ஏற்றுக் கொள்ள…

Read More

கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரபுசங்கர் ஐஏஎஸ் பொதுமக்களிடையே அதிகளவில் கவனம் ஈர்த்து வருகிறார். கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 16ஆம் தேதி பிரபுசங்கர் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டது முதலே அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். “தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு” என்ற திருக்குறளை முன்னிறுத்தி அதேபோல தனது பணி இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். அதனைப் போலவே பொறுப்பேற்ற முதல் நாளில் கவச உடை அணிந்து கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதோடு நோயாளிகளிடம் நலம் விசாரித்து, முறையான சிகிச்சை வழங்க வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோல் ரேஷன் கடைகளுக்கும் சென்று அதிரடி ஆய்வு செய்து, அங்கு கொரோனா பொருட்கள் வாங்க காத்திருந்த மக்களிடம் மன்னிப்பு கோரி நெகிழ வைத்தார். அந்த வகையில் நேற்று வேங்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வுசெய்தார். அப்போது…

Read More

சிறுமிகளை, பெண்களை ஆபாசமாக பேசி யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வழக்கில் கைதான பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘பப்ஜி’ விளையாட்டை பிரைவேட் சர்வர் மூலமாக விளையாடி, அதை யூடியூப் வலைதளத்தில் ஸ்ட்ரீமிங் செய்து வந்தவர் மதன். இவரது யூடியூப் சேனலை பின்தொடர்பவர்கள் பப்ஜி விளையாட்டால் ஈர்க்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ளவர் தான் என்று கூறப்படுகிறது.இந்த யூடியூப் சேனலில் பெண்களை பற்றி ஆபாசமாக பேசி தனது யூடியூப் பக்கத்தில் பதிவுகளை மதன் வெளியிட்டு வந்தார். இதன்மூலம் லட்சக்கணக்கில் பணத்தையும் சம்பாதித்துள்ளார். இது குறித்து மதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக்ரபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்தார். சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.…

Read More

கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தெலுங்கானாவில் கொரோனா ஊரடங்கு நாளை முதல் முடிவுக்கு வரவுள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலை வீசத்தொடங்கிய போது அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று. அங்கு மே 12 ஆம் தேதி முதல் தற்போது வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மற்றும் கொரோனா நேர்மறை சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாகவும் மருத்துவ அதிகாரிகள் அறிக்கைகள் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஊரடங்கை முழுவதுமாக நீக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும் அங்கு அமலில் உள்ள அனைத்து வகையான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் நாளை முதல் விலக்கிக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

ரொனால்டோ போன்று செய்தியாளர் சந்திப்பில், விராட் கோலி கோகோ கோலா பாட்டிலை அகற்றாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டினா ரொனால்டோ சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது மேஜையின் மீது இருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றி விட்டு தண்ணீர் பாட்டிலை காண்பித்தார். ரொனால்டோ-வின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பினரும் அவரை கொண்டாடி தீர்த்தனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்ப கோகோ கோலா நிறுவன பங்குகளின் மதிப்பு சரசரவென சரிந்தது.இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற விராட் கோலி மேஜையில் இருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க, அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டார் விராட்.

Read More