கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

SHARE

கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரபுசங்கர் ஐஏஎஸ் பொதுமக்களிடையே அதிகளவில் கவனம் ஈர்த்து வருகிறார்.

கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 16ஆம் தேதி பிரபுசங்கர் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டது முதலே அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார்.

“தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு” என்ற திருக்குறளை முன்னிறுத்தி அதேபோல தனது பணி இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

அதனைப் போலவே பொறுப்பேற்ற முதல் நாளில் கவச உடை அணிந்து கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதோடு நோயாளிகளிடம் நலம் விசாரித்து, முறையான சிகிச்சை வழங்க வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதேபோல் ரேஷன் கடைகளுக்கும் சென்று அதிரடி ஆய்வு செய்து, அங்கு கொரோனா பொருட்கள் வாங்க காத்திருந்த மக்களிடம் மன்னிப்பு கோரி நெகிழ வைத்தார்.

அந்த வகையில் நேற்று வேங்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வுசெய்தார். அப்போது அங்குள்ள ஆய்வுக் குறிப்பேட்டைப் பார்வையிட்டபோது, குறிப்பு ஒன்றை எடுத்துப் பார்த்திருக்கிறார். அதில் 1959ஆம் ஆண்டு அப்போதைய குளித்தலை தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த முதலமைச்சர் கருணாநிதி இப்பள்ளியை ஆய்வு செய்து அவர் கைப்பட எழுதிய குறிப்பு இருந்துள்ளது.

இதனை பிரபுசங்கர்
தனது ட்விட்டர் பக்கத்தில்
பதிவிட்டிருக்கிறார். அந்தக் குறிப்பில், “மு.கருணாநிதி எம்எல்ஏ இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்பப் பாடசாலையைப் பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107-ல் இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர். இந்தப் பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப் போயிருக்கின்றன. அவை உடனே கவனிக்க பட்டால் நலம்”


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

Factcheck: அதிமுகவால் தான் சிஏஏ சட்டம் நிறைவேறியதா? உண்மை என்ன தெரியுமா?

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

புகைப்படத்துக்கா பஞ்சம்? திமுக – அதிமுக விளம்பரங்களில் காணப்பட்ட ஒரே புகைப்படத்தால் சர்ச்சை…

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

சென்னை திரும்பினார் ரஜினி.. விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள்

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா தப்பியோட்டம்!

Admin

சிங்கங்களுக்கு கொரோனா.. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Admin

திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Admin

Leave a Comment