டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: இந்திய அணி நிதான ஆட்டம்

SHARE

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இப்போட்டி நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் அங்கு பெய்த மழையின் காரணமாக டாஸ் கூட போடாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் களமிறங்கி நிதானமாக ஆடினர். இவர்களில் ரோகித் சர்மா 34 சுப்மன் கில் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா வெறும் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இதையடுத்து கேப்டன் விராத் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் பொறுப்போடு ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் 64 .4 ஓவரில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

விராத் கோலி 44 ரன்களுடனும் ரஹானே 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடங்குகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியா…ரூ. 4 கோடி பரிசு அறிவித்த ஹரியானா அரசு

Admin

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

‘இந்திய அணியில் மீண்டும் தோனி’ – டி20 உலக்கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

நம்ம வீரர்கள் கொஞ்சம் பயந்துதான் போயிட்டாங்க: தினேஷ் கார்த்திக் விளக்கம்

Admin

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

அடுத்த ஆண்டிலும் சி.எஸ்.கே..?தோனி சூசகம்… ரசிகர்கள் மகிழ்ச்சி…

இரா.மன்னர் மன்னன்

கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

Admin

Leave a Comment