- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையை பெட்ரோல் விலை நீக்கி விட்டதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டலாக பதிவு செய்துள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது, இதற்கு மாநில அரசுகள், அரசியல் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர், உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது! தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதாகவும், கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 75 டாலர் என இருக்கும் போது ஏன் இந்த நிலை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரை தாண்டியது என்றும், ஆனாலும் பெட்ரோல்…
தமிழக அரசு அறிவித்திருக்கும் பிளஸ்டூ மதிப்பெண் கணக்கீட்டு முறை அனைவருக்கும் திருப்தி அளிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ்,பிளஸ்டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கண்க்கீடு செய்தது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தார். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்போதைய மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டதாக கூறிய அமைச்சர். 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தால் அதிகபட்சமாக மதிப்பெண் எடுத்து இருப்பேன் என கருதும் மாணவர்கள் ,தனி தேர்வு எழுத கூடிய மாணவர்களுடன் தேர்வு எழுதலாம் என்றும், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் நேரத்தில் அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை முறைப்படி அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அன்பில் மகேஷ்,அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கொரோனா நோய் பரவல் காரணமாக 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநில அரசுகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன. இந்த நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்த அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மதிப்பெண்கள் வழங்கும் முறை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத்து முறையில் பெற்ற 20 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும். 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் இருந்து 30% மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும். 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும்…
தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு அணில்கள் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் கூறியது விவாதப் பொருளானது. மின்தடை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் மின்கம்பிகளில் ஓடும் அணில்களால் மின்தடை ஏற்படுவதாக விளக்கம் கொடுத்தார். இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செந்தில் பாலாஜியின் கூற்றை கிண்டல் செய்துள்ளார். செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ ”அணிலால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும். செந்தில்பாலாஜி கண்டுபிடிப்பால் நல்லவேளை நான் தப்பித்துவிட்டேன். எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்றுகொண்டிருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் விளக்கம் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு நேற்று ஒரு மணி நேரத்திற்கு முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கமளித்தது. இந்த நிலையில் அமைச்சரின் டுவிட்டர் கணக்கு ஒரு மணி நேரம் முடக்கம் செய்யப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் ஒன்றுதான் காரணம் என்ற விவரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏ.ஆர் ரகுமானின் மா துஜே சலாம் என்ற பாடலின் வீடியோ ஒன்றை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் பயன்படுத்தியுள்ளார். இது காப்புரிமை பெறப்பட்ட வீடியோ என்பதால் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, , மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று நடந்த இணையவழிக் கலந்துரையாடலில் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை செயல்படுத்த புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளேன். மேலும், கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்றுப் பணியாற்ற இருக்கிறேன். புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற…
இந்தியாவின் பல மாநிலங்களில் உருமாறியுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், டெல்டா பிளஸ் வகை வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது. எனவே கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். சென்னை காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
எச்.ராஜா மீது பாஜக நிர்வாகிகள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார் ம பொ சிவஞானத்தின் 116வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் ம.பொ.சிவஞானத்தின் படத்திற்கு எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன்சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களை போற்றுவது பாஜகவின் வழக்கம், அந்த வகையில் ம.பொ. சிவஞானத்தை 116வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டதாக கூறினார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என கூறினார். தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் மீது பாலியல் புகார் தொடர்பாக தனியார் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, பாஜகவில் அதுபோல் எந்த நிகழ்வும் நடக்க வில்லை எனவும் அது தொடர்பாக தனியார் பத்திரிகைக்கு சட்டபூர்வ…
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி அவர்கள், உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்: உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார். அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் . மேலும் தொகுதியின் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று அறிவிக்குமாறும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் மீதான வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை சில…
கங்கைகொண்ட சோழபுர அகழாய்வின்போது முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, அரண்மனையின் இரண்டாம் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை மூலம், 2020-21 ஆண்டிற்கான அகழாய்வு பணிகள்கடந்த ஆட்சியில் தொடங்கின. அதன்படி, தமிழகம் முழுதும் கீழடி, ஆதிச்சநல்லுார், கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் நடந்தன. அந்த வகையில்,அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகில் அமைந்துள்ள மாளிகைமேடு என்னும் பகுதியில், கடந்த மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவல்காரணமாக அகழாய்வுப் பணிகள் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது, ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் கடந்த, 14ம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கியது. ஏற்கனவேமாளிகை மேட்டில்அகழாய்வு நடத்திய போது பழங்கால ஓடுகள்,, இரும்பிலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள் கிடைத்து அவற்றை தொல்லியல் துறையினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அது மட்டும் அல்லாது முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட…
