மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம்..

SHARE

டுவிட்டர் விளக்கம் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு நேற்று ஒரு மணி நேரத்திற்கு முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கமளித்தது. இந்த நிலையில் அமைச்சரின் டுவிட்டர் கணக்கு ஒரு மணி நேரம் முடக்கம் செய்யப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் ஒன்றுதான் காரணம் என்ற விவரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஏ.ஆர் ரகுமானின் மா துஜே சலாம் என்ற பாடலின் வீடியோ ஒன்றை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் பயன்படுத்தியுள்ளார். இது காப்புரிமை பெறப்பட்ட வீடியோ என்பதால் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

இந்திய பிரதமரை தவறாக சித்தரித்த யூ-டியூப் சேனல் மீது புகார்.!!!

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் பயணம் தோல்வி…காரணம் என்ன?

Admin

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

“மிகப்பெரிய திட்டம் வருது” … மோடியின் சுதந்திர தின உரையில் வெளியான அறிவிப்பு

Admin

ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

Admin

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

Leave a Comment