- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், நடிகர் ரஜினிகாந்தாக மாறி நடனம் ஆடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர், ஐ.பி.எல்லில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், புட்டபொம்மா பாடல் உட்பட பல நடனங்களை ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இதற்கிடையில், ஃபேஸ் ஆப் மூலமாக பல நடிகர்களாக மாறி அசத்தி வந்த டேவிட் வார்னர், ரஜியின் எந்திரன் படத்தில் இடம்பெற்ற கிளிமாஞ்சாரோ பாடலுகு உற்சாக நடனம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன் என கூறிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அமிதாப் தாக்கூர் என்பவர் யோகி ஆதித்தியநாத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன் என கூறியுள்ளார். இந்நிலையில், அமிதாப் தாக்கூரை போலீசார் தற்கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாக கூறி வலுகட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். கைதின்போது அமிதாப் தாக்கூரை போலீசார் வாகனத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றும் வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆளும் கட்சியின் அராஜகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் கொண்டாடுவது பற்றி இந்து முன்னணியினர் கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை உருவாக்கி உள்ளதாக கூறினார். மேலும், இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் ரமலான், பனிமயமாதா திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் கொண்டாடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை படுஜோராக நடைபெற்றுவருகிறது. ஆகவே இந்த ஆண்டு அரசு அனுமதியுடன் விநாயகர் சதுர்த்திக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஊர்வலம் நடத்த அரசு அனுமதி வழங்கவேண்டும் என கூறினார். தொடர்ந்து பா.ஜ.க பிரமுகர் கே.டி.ராகவன் விவகாரத்தில் வீடியோ வெளியிட்ட நபர் மதன்ரவிச்சந்திரன் குறித்து பேசிய சுப்பிரமணியம், ”மதன் மன நலம் சரியில்லாத நபர், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தொகுப்பாளராக வரும்…
கொரியன் வெப் சீரிஸ் ரீமேக்கில் நடிகை சமந்தா ஆடையில்லாமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா கடைசியாக தெலுங்கில் ஜானு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் ஆகும். தற்போது விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல், தி ஃபேமிலி மேன் என்ற தொலைக்காட்சி தொடரிலும் சமந்தா நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு உச்சம் சென்ற அவரின் சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. சமீபத்தில் கூட கணவர் நாக சைதன்யாவின் குடும்ப பெயரை தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கி இருந்தார். உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் தேவைக்காக படுக்கையை பகிரும் இலங்கை தமிழ் பெண்ணாக சமந்தா நடித்திருந்ததற்கு…
தமிழ்நாடு சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய சட்டசபை கூட்டத்தில்பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானிய கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ. வேலு உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார். அதற்கு முன்பு அவையின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்து உரையாற்றினார். அப்போது உரையை ஆரம்பிக்கும் முன்னர் ஸ்டாலின், சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என்று வலியுறுத்தினார். நேரம் குறைவாக இருப்பதால் அமைச்சர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிப்பதாக முதல்வர் கூறினார். தமிழ்நாடு சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன்பு பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதனை வழக்கமாக்கியிருப்பதால் இது போன்ற புகழ்ச்சி உரையை சட்டமுன்வடிவு மற்றும் கேள்வி நேரங்களில் பயன்படுத்துவதால் நேரம் விரயம்…
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு புதிய தலைவலியாக தீவிரவாத அமைப்பு ஒன்று அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் விலக்கி கொல்லப்பட்டதையடுத்து அங்கு தலிபான்கள் முழுமையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் நாட்டு மக்கள் உயிர் வாழ பயந்து வேறு நாடுகளில் தஞ்சம் அடைய விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்திற்குன் ஐஎஸ்ஐஎஸ்-கே என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதேசமயம் இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு தீவிரவாத அமைப்பின் மீது மற்றொரு தீவிரவாத அமைப்பு பழிபோடும் விளையாட்டை தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வானொலிக்கு தாலிபான்…
ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன் இருந்ததுபோல, ராமனுக்கு அனுமன் இருந்தது போல திமுக ஆட்சியமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளிக்கும் முன் பேசிய அமைச்சர் எ.வவேலு கே.ஆர்.ராமசாமி, பி.வி.நாராயாணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர், மு.க.ஸ்டாலின் வழியில் திரையுலகத்தில் திராவிட கொள்கைகளை எடுத்துச் சொல்வதற்கும் நம்முடைய பிரச்னைகளையும் எடுத்துச் சொல்வதற்கும் நகைச்சுவை தென்றலாக உதயநிதி உலாவிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை சொல்லும் போதெல்லாம் தங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், திமுக திரையுலகில் பட்டுப்போய்விடுமோ என்று அஞ்சிய நிலையில் நமக்கு ஒரு திராவிட நடிகர் கிடைத்திருக்கிறார் என்று எ.வ.வேலு புகழ்ந்துள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் பிரசாரத்திற்கு செல்ல முடியாத கிராமப்புற தொகுதிகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்து இன்று மேஜை தட்டும் பல சட்டமன்ற உறுப்பினர்கள்…
‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படம் தொடர்பான விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் – வடிவேலு இருவருக்கும் இடையே சுமூகதீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’. இதன் 2 ஆம் பாகம் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் உருவாக உள்ளதாக இரு வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே கதையில் வடிவேலு தலையிடுவதாகவும், இயக்குனர் சிம்புதேவனுடன் மோதல் போன்ற தகவல்கள் நிலவி வந்த நிலையில் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.நடுவில்…
டெல்லி அரசு கொண்டுவந்துள்ள ‘Desh Ke Mentors’ என்ற ‘மாணவர்களுக்கான வழிகாட்டி’ திட்டத்தின் தூதராக நடிகர் சோனு சூட் அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் இணைந்து பேட்டியளித்த நடிகர் சோனு சூட், இத்திட்டத்தில் இணைந்ததை உறுதி செய்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, தான் அரசியலில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை என்றும், கெஜ்ரிவாலிடமும் அதுகுறித்து எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும் விளக்கினார். ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குவது அவசியம் என்பதால், விரைவில் அறிமுகமாக உள்ள அத்திட்டத்தின் தூதராக தாம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதாக தெரிவித்தார்.
தாய்பூனை தனது குட்டிக்கு படியேற கற்றுக்கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்களை போல் விலங்குகளும் தங்களின் குட்டிகள் மீது அதீத அன்பு கொண்டதாக உள்ளன. அவ்வபோது இணையத்தில் வெளியாகும் விலங்குகளின் அதீத அன்பு கொண்ட வீடியோ இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் வீட்டில் வலம் வந்த பூனை, தனது குட்டிகளும் விரும்பிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தனது 3 குட்டிகளை வீட்டில் உள்ள படிக்கட்டு அருகே வரவழைத்து ஒவ்வொரு பூனைக்குட்டிகளுக்கும் படிக்கட்டு ஏற கற்றுக்கொடுத்ததுள்ளது. தாய் பூனையின் கண்ணசைவிற்கேற்ப, பூனைக்குட்டி ஒன்று படியில் தவழ்ந்து, உருண்டு மேற்படிக்கு சென்ற வீடியோ இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் அதிகமான பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
