Author: Admin

ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது 17 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அங்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை நிர்வகித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு புதிய ஆட்சி நிர்வாகம் அமைக்க அவர்கள் தயாராகி வருகின்றனர். அதேசமயம் எதிர்ப்புப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் தாலிபான்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்த நிலையில், அதனை கைப்பற்றியுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 17 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் பஞ்ச்ஷிரை கைப்பற்றியதாக வெளியான செய்தியை தாலிபான் எதிர்ப்பு தலைவர்கள் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

நடிகர் சூர்யா நடித்த படத்தின் பாடலைக் கேட்டு தான் கண்ணீர் விட்டு கதறி அழுததாக இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு தீபாவளிக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப்போற்று’.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் நடந்த மெல்பெர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்தோடு படமானது ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதனிடையே 2 நாட்களுக்கு முன் இரவில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தை அமிதாப் பச்சன் பார்த்துள்ளார். அந்த படத்தில் வரும் கையிலே ஆகாசம் என்ற பாடலை பார்த்து அமிதாப் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுள்ளார்.இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி பாடியிருந்தார். மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த பாடல் மிக குறைந்த…

Read More

பேச்சு பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான் காரணம் என்று பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாத் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை தினமும் நிர்ணயிக்கப்படும் முறை அமலில் உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின் ராக்கெட் வேகத்தில் சென்ற பெட்ரோல் விலை இந்தியாவின் பல இடங்களில் கடந்த ஜூலை மாதம் ரூ.100ஐ கடந்து வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியளித்தது. இதனிடையே கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் இந்தியாவின் எரிபொருள் விலை உயர்வின் பின்னணியில் தலிபான்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்களின் பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்து தான் உலகில் எரிபொருள் பற்றாக்குறை உருவானதாகவும், அதுவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்தது என்றும் கூறியுள்ளார். ஆனால் ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அதேசமயம் எரிபொருளைப்…

Read More

ஜப்பான் பிரதமர் யோஷிஹிதோ சுகா பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே கடந்தாண்டு உடல்நிலை பாதிப்பால் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக யோஷிஹிதே சுகா பதவியேற்றார். அதுவே அவருக்கு சோதனைக் காலமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம். கடந்தாண்டு 2 ஆண்டுகளாக உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று ஜப்பானிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. அங்கு சுகா தலைமையிலான அரசு கொரோனா பரவலைக் கையாண்ட விதம் நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் யோஷிஹிதே சுகா இம்மாத இறுதியில் நடைபெற உள்ள கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். கொரோனாவை சரியாக கையாளத் தவறிய தனது அரசு மீதான மக்களின் அதிருப்தியை கருத்தில் கொண்டே அவர் இந்த…

Read More

ஜியோ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன் உலகில் முன்னணியில் உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் சார்பில் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த ரிலையன்ஸ் ஏஜிஎம் மாநாட்டில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்தது. இதனிடையே அந்த ஸ்மார்ட்போன் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது . இதன்படி இது இரண்டு மாடல்களில் கிடைக்கும் என்றும், ஒன்று ஜியோ போன் நெக்ஸ்ட் பேசிக் மாடல், மற்றொன்று ஜியோபோன் நெக்ஸ்ட் அட்வான்ஸ் மாடல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,000 மற்றும் ரூ.7,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் 10 சதவிகிதமான ரூ.500,700 மட்டுமே செலுத்தி வாங்கலாம் என்றும், மீதமுள்ள பணத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான இஎம்ஐ மூலம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10…

Read More

இந்து கலாச்சாரத்துக்கு எதிரான பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என மயிலாடுதுறை பாஜக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கம்போல எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. அந்த வகையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் மோடி கண்ணன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது.இதற்காக 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுகின்றனர். கொரோனா…

Read More

பாஜகவைச் சொன்னால் சீமானுக்கு ஏன் வலிக்கிறது? என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வியெழுப்பி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தமிழக பாஜக மாநில செயலாளரான கே.டி.ராகவனின் பாலியல் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கே.டி.ராகவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதே சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார். அதை காட்சிப்படுத்துவதுதானே சமூக குற்றம். முதலில் அந்த வீடியோவை வெளியிட்டவரை தான் கைது செய்ய வேண்டும் என சீமான் கூறியிருந்தார். இதற்கு கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி, சீமான் பாஜகவின் B Team தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார் என்றும், அவரின் இந்த செயல் வெட்கக்கேடானது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த சீமான், பாலியல் வன்புணர்ச்சி,…

Read More