ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது 17 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அங்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை நிர்வகித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு புதிய ஆட்சி நிர்வாகம் அமைக்க அவர்கள் தயாராகி வருகின்றனர்.
அதேசமயம் எதிர்ப்புப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் தாலிபான்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்த நிலையில், அதனை கைப்பற்றியுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் 17 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் பஞ்ச்ஷிரை கைப்பற்றியதாக வெளியான செய்தியை தாலிபான் எதிர்ப்பு தலைவர்கள் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.