‘நீ ஜெயிச்சிட்ட மாறா’…அமிதாப்பச்சனை கதறி அழவைத்த சூர்யா பட பாடல்

SHARE

நடிகர் சூர்யா நடித்த படத்தின் பாடலைக் கேட்டு தான் கண்ணீர் விட்டு கதறி அழுததாக இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு தீபாவளிக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப்போற்று’.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடந்த மெல்பெர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்தோடு படமானது ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதனிடையே 2 நாட்களுக்கு முன் இரவில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தை அமிதாப் பச்சன் பார்த்துள்ளார்.

அந்த படத்தில் வரும் கையிலே ஆகாசம் என்ற பாடலை பார்த்து அமிதாப் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுள்ளார்.இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி பாடியிருந்தார்.

மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த பாடல் மிக குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்து இறங்கி வரும் கிராமத்து பாட்டிகள், நண்பர்கள், மணக்கோலத்தில் திருமண ஜோடி, மறைந்த அப்பாவின் ஃபோட்டோவுடன் வரும் அம்மா ஊர்வசி ஆகியோரை பார்த்து கண்கலங்கி, உணர்ச்சி பெருக்குடன் சூர்யா நிற்பதாக இந்த பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இதனை பார்த்து விட்டு அழுததுடன், மிக உருக்கமாக கருத்தையும் அமிதாப்பச்சன் பதிவிட்டுள்ளார்.

அதில் சில நேரங்களில் உணர்ச்சிகள் எதிர்பார்க்காத அளவிற்கு வெளி வருவதுண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று இரவு நடந்தது.

மிக பெரிய உணர்ச்சி பெருக்கு. என்னால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் கண்ணில் இருந்து கண்ணீர் வெள்ளம் போல் கொட்டியது.அந்த தருணத்தை விரிவாக பகிர முடியவில்லை. இருந்தாலும் இங்கு சொல்கிறேன்.

ஒரு தமிழ் பாடல், சூர்யா நடித்த படம். சூர்யா ஒரு தென்னிந்திய சூப்பர் ஸ்டார். அந்த வீடியோவை பார்த்த போது மனது நொறுங்கி விட்டது. வித்தியாசமான உணர்வு. மிக தத்ரூபமாக இருந்தது அந்த வீடியோவில் சூர்யாவின் உணர்வு.

அந்த தத்ரூபமாக உணர்ச்சியை வெளிப்படுத்திய விதம் தான் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம். அந்த தந்தை – மகன் இடையேயான அற்புதமான உணர்வு. இது தான் அந்த வீடியோ என குறிப்பிட்டுள்ளார்.

தான் கண்ணீர் விட்டு அழுததை சொன்னதுடன், அந்த பாடல் வரிகளை தன்னால் முடிந்த வரை மொழிபெயர்ப்பும் செய்து பதிவிட்டிருந்தார் அமிதாப் பச்சன்.

இதை பார்த்து விட்டு அமிதாப்பை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்களும் இந்த பாடலை பாராட்டி உள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் நெற்றிக்கண்!

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

Admin

கேஜிஎஃப் – 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Admin

“பிக்பாஸ்” ஓவியாவின் புதிய வெப் தொடர் இன்று ரிலீஸ்

Admin

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

Admin

பிரபலமான இந்தியப் படங்களில் முதலிடத்தில் மாஸ்டர்!

Admin

சர்கார் சர்ச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு ரத்து!

Admin

எனது பிரச்சினையை தீர்த்து வைத்தவர் இவர்தான் – உண்மையை போட்டுடைத்த வடிவேலு

Admin

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் !! நலமுடன் இருப்பதாக விளக்கம்!!

Admin

வன்கொடுமை வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

Admin

Leave a Comment