Author: Admin

புதுடெல்லி நமது நிருபர் 75ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நாடெங்கும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்தார். மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கொரோனா காரணமாக ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் நடந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்து அங்கு பேசினார். அப்போது அவர், நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு நடத்தப்படும் என்றும், இந்தக் கொண்டாட்டங்கள் மார்ச் 12ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கும் என்றும் அறிவித்தார். இந்தக் கொண்டாட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Read More

நமது நிருபர் யூடியூபில் சென்னை தமிழச்சி என்ற பெயரில் பிரபலமான பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடுகிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பேரவைத் தேர்தலில் 136 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 70 வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். இந்த வேட்பாளர் பட்டியலில் சமூக ஆர்வலர்கள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, கல்வியாளர்கள் போன்ற மக்களுக்கு பரிச்சயமான பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடுபவராக பிரபல யூடியூபரான சென்னை தமிழச்சி பத்மப்பிரியா அறிவிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு 2020 ல், தனது யூடியூப் சேனலில் மத்திய அரசின் ’சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” வரைவு அறிக்கையை பற்றிய தகவல்களையும், இதனால் மக்களுக்கும், சுற்றுக்சூழலுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகளையும், பற்றி பேசிய ஒரு வீடியோவை இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். கோபத்தோடு இவர் பேசிய…

Read More

மியான்மர் இராணுவத்தினர் பொதுமக்களைக் கொல்ல உத்தரவிட்டதால் ஒரு இராணுவ அதிகாரி இந்தியாவில் அகதியாகத் தஞ்சம் புகுந்துள்ளார். தமிழர்களுக்கு பர்மா என்ற பெயரில் பரிச்சயமான நாடுதான் மியான்மர். இங்கு அடிக்கடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்ப்பது உண்டு. தற்போதும் அங்கு இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது. அடக்குமுறைகள் நிறைந்த இராணுவ ஆட்சியை பர்மிய மக்கள் வெறுக்கிறார்கள். இதனால் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அங்கு வலுவடைந்து உள்ளன. அதே சமயம் மியான்மரின் இராணுவமும் போராட்டக்காரர்கள் ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்து வருகின்றது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களைக் கொல்ல தனது உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், அதனைச் செய்ய மனம் வராமல் குடும்பத்தோடு மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு வந்து அகதியாக தங்கி உள்ள ஒரு அதிகாரியின் கதை ஊடகங்களில் வெளியாகி உள்ளது. மியான்மரின் காம்பாட்நகரில் பிப்ரவரி 27ஆம் தேதியன்று போராட்டக் காரர்களை சுட்டுக் கொல்லும்படியான உத்தரவு தா பெங் என்ற…

Read More

நமது செய்தியாளர் துபை ஐசிசிஐ தரவரிசைப் பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலிடம் பிடித்து உள்ளது. சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசிஐ தனது 3 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டு உள்ளது. அதில் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தையும், ஒருநாள் கிரிக்கெட் அணிகள் மற்றும் டி20 அணிகளுக்கான தரவரிசைகளில் இந்திய அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி20 போட்டித் தொடரில், ஆஸ்திரேலிய அணி அடைந்த தோல்வி ஆஸ்திரேலிய அணியை இந்தியாவுக்கு அடுத்த 3ஆவது இடத்துக்கு தள்ளி உள்ளது. மேலும், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் கேஎல் ராகுல் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Read More

நமது நிருபர் இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது எழுந்த நிறவெறிக் குற்றச்சாட்டுக்கு இங்கிலாந்து ராணி விளக்கம் அளித்து உள்ளார். ஹாலிவுட் நடிகையான மேகன் மார்கல் சில ஆண்டுகள் முன்பு பிரிட்டன் இளவரசர் ஹாரியை காதல் திருமணம் செய்து கொண்டார். மார்கல் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்தவர் என்பதோடு அவர் ஆப்ரிக்க வம்சாவழித் தொடர்பும் உடையவர் என்பதால் இந்தத் திருமணத்தை ஏற்பதில் பிரிட்டன் அரச குடும்பம் தயக்கம் காட்டுவதாக அப்போதே தகவல்கள் கசிந்தன. பின்னர் சில ஆண்டுகள் முன்பு இந்தத் தம்பதிகள் பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். இதனை பிரிட்டன் அரச குடும்பமும் ஏற்றது. ஆனால் எந்த காரணத்திற்காக இவர்கள் வெளியேறினார்கள் என்பதில் பல்வேறு யூகங்களே வெளியாகின. மேகன் – ஹாரி தம்பதிகள் நேரடியான பதில் எதையும் கூறவில்லை. இந்நிலையில், சமீபத்தில் உலகின் நம்பர் 1 தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியான ஓபரா வின்பரேவின் நிகழ்ச்சிக்கு வந்த மேகன் மார்கல், ”நான்…

Read More

நமது நிருபர். ஆப்ரிக்க நாடான காங்கோவில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தங்க மலையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. உலகின் மிக அரிய உலோகங்களில் தங்கமும் ஒன்று. தங்கச் சுரங்கங்களில் கூட ஆயிரம் கிலோ மண்ணை சுத்தப்படுத்தும்போது 4 முதல் 8 கிராம் தங்கமே கிடைக்கின்றது. இந்த 4 கிராம் தங்கம் கூட கிடைக்கவில்லை என்ற காரணத்தால்தான் இந்தியாவில் கோலார் தங்கச் சுரங்கம் மூடவும்பட்டது. இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள லுகிகி என்ற கிராமத்தில் ஒரு தங்க மலை தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சில உள்ளூர் வாசிகள் இந்த மலையின் மண்ணை ஆராய்ச்சி செய்தபோது, அதில் 60 முதல் 90 விழுக்காடு வரையில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே உள்ளூர்வாசிகள் கடப்பாறை, மண்வெட்டியுடன் அங்கு வந்து மண்ணை எடுத்துச் சென்றனர். இந்தச் செய்தி காங்கோ முழுக்க பரவ, பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு வர ஆரம்பித்தனர். இப்படியாக மக்கள் மண்ணை அள்ளிச்…

Read More

செ.கஸ்தூரி ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சிக்காக பாடகி தீ பாடிய தனியிசைப்பாடல் டிரெண்டிங்கில் ஹிட் அடித்து உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் திரைப்பட இசைக்கு பெரிய சந்தை இல்லை. அங்கு இசைக் குழுக்களின் ஆல்பங்கள் எனப்படும் தனியிசைப் பாடல்கள்தான் சக்கைபோடு போடுகின்றன. இதே நிலை விரைவில் இந்தியாவிலும் ஏற்படும் என்பதே இசைத்துறையினரின் கணிப்பாகவும் உள்ளது. தெற்காசிய நாடுகளில் தனியிசைப் பாடல்களை உருவாக்கும் பணியில் உள்ள தெற்காசிய சுயாதீன கலைஞர்களின்(South Asian Independent Artist) குரல்களை உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்கும் விதமாக ஏஆர்.ரஹ்மான் “மாஜா” என்ற தளத்தை ஜனவரி 26ஆம் தேதி தொடங்கினார். “மாஜா” தளத்தின் முதல் பாடலாக ’ரவுடி பேபி’ உள்ளிட்ட பாடல்களைப் பாடிய தமிழ்ப் பாடகி தீ, ராப் பாடகர் அறிவு ஆகியோர் பாடிய ’எஞ்சாய் எஞ்சாமி’ என்ற பாடல் கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் நடத்தப்பட்ட வெளியீட்டு நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள்…

Read More

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26 அன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோவால் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்ட மன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகத்துக்கான தேர்தல் அட்டவணை தேர்தல் அறிவிக்கை மார்ச் 12, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 , வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20, வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22, வாக்குப்பதிவு ஏப்ரல் 6 என வடிவமைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் மறைவு காரணமாக காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற…

Read More

நமது நிருபர் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிப் போவதாக, பட வெளியீட்டு நிறுவனம் அறிவித்தது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். பிரியங்கா இந்தத் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். அனிருத்தின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று உள்ள நிலையில், படத்தின் வெளியீடு மார்ச் 26ஆம் தேதியன்று இருக்கும் என்று படத்தைத் தயாரித்து இருந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் மற்றும் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனங்கள் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழக பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் டாக்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. இந்த செய்தியை, டாக்டர் படத்தை வெளியிடும் கே.ஜே.ஆர் நிறுவனம் தனது அறிக்கை மூலம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் அந்த அறிக்கையில் “மார்ச்…

Read More

நமது நிருபர் பெரியாரை இழிவுபடுத்தியதாக எழுந்த சர்ச்சையில் விளக்கம் அளித்த திரைப்பட இயக்குநர் செல்வராகவன் மன்னிப்பும் கேட்டார். செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். சைக்கோ மனநிலை உள்ள ஒரு மனிதனின் கதைதான் இந்த நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப் படம் தொடர்பான பேட்டி ஒன்றில், ‘படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராம்சே என உள்ளது. அது ஈ.வே.ராமசாமியைக் குறிக்கவா?’ – என்ற பொருளில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு செல்வராகவன் ‘ஆமாம்!’ – என்றும் பதில் சொன்னார். இதனால் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் ‘ஒரு சைக்கோ கதாப்பாத்திரத்துக்குப் பெரியாரின் பெயரா?’ – என்று தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து டுவிட்டரில் விளக்கமளித்துள்ள செல்வராகவன் “நண்பர்களே! அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு…

Read More