டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

SHARE

நமது நிருபர்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிப் போவதாக, பட வெளியீட்டு நிறுவனம் அறிவித்தது.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். பிரியங்கா இந்தத் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர்.

அனிருத்தின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று உள்ள நிலையில், படத்தின் வெளியீடு மார்ச் 26ஆம் தேதியன்று இருக்கும் என்று படத்தைத் தயாரித்து இருந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் மற்றும் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனங்கள் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தமிழக பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் டாக்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. இந்த செய்தியை, டாக்டர் படத்தை வெளியிடும் கே.ஜே.ஆர் நிறுவனம் தனது அறிக்கை மூலம் உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்

“மார்ச் 26-ம் தேதி டாக்டர் படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் நலனையும், குறிப்பாக ரசிகர்களையும் மனதில் வைத்து இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

புதிய தேதியை இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். ‘டாக்டர்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே கொடுத்து வந்த ஆதரவை, ஊக்கத்தை அப்படியே வைத்திருங்கள். இந்தக் காத்திருப்புக்கு தகுதியுள்ள படமாக ‘டாக்டர்’ இருக்கும்” – என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

#டாக்டர் #சினிமா #சிவகார்த்திகேயன் #அனிருத்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளியானது நெற்றிக்கண் டைட்டில் பாடல்… உற்சாகத்தில் நயன்தாரா ரசிகர்கள்…

Admin

‘ஐ எம் பேக் டூ ஒர்க்’ – மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட விஜே அர்ச்சனா

Admin

ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

கமலுடன் இணையும் வெற்றிமாறன்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Admin

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்… விரைவில் கைது நடவடிக்கை?

Admin

கிருத்திகா உதயநிதியுடன் இணையும் காளிதாஸ்… நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

மார்ச் 1இல் கில்லி ரீரிலீஸா? உண்மையான தேதி என்ன?

Pamban Mu Prasanth

நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

சர்கார் சர்ச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு ரத்து!

Admin

Leave a Comment