Author: Admin

தனது பெயரையும் புகைப்படத்தையும் அனுமதியின்றி பயன்படுத்திய செல்ஃபோன் செயலிக்கு காங். தலைவர் சசி தரூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிளாக்போர்ட் ரேடியோ என்ற ஆங்கில மொழி கற்பிக்கும் செல்போன் செயலியானது, தனது விளம்பரத்தில் ’speak English as fluently as shashi tharoor’ என்று விளம்பரப்படுத்தி இருந்தது. அப்படி என்றால், ”சசி தரூர் போல சரளமாக ஆங்கிலம் பேசலாம்” என்பது அர்த்தமாகும். கொஞ்ச காலமாக நெட்டில் உலாவிக்கொண்டிருந்த இந்த விளம்பரத்தை ஒருவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சசி தரூரின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதனை கண்டதும் உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கும் தனக்கும் தொடர்பில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் சசி தரூர். ”இந்த செயலிக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, இதனை நான் அங்கீகரிக்கவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். வணிக நோக்கங்களுக்காக எனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்துவதை நிறுத்த சட்ட நடவடிக்கை எடுப்பேன் “ என்று அந்த…

Read More

திரைப்படத் தயாரிப்பில் பெரிதும் அறியப்பட்ட ஏவி.எம் நிறுவனம் வெப் தொடர் தயாரிப்பில் களம் இறங்கி உள்ளது. தமிழ்த் திரையுலகில் 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்தான் ஏவி.எம். புரொடக்‌ஷன்ஸ். தரமான திரைப்படங்களை குடும்பத்தோடு ரசிக்கும்படி கொடுப்பதே ஏ.வி.எம் நிறுவனத்தின் தனித்துவம். சமீபத்திய ஆண்டுகளில் திரைப்படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஏவி.எம் நிறுவனம் தற்போது தனது அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்து உள்ளது. அந்த அறிவிப்பின்படி “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற வெப் தொடரை ஏவி.எம் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது இவர்களின் முதல் வெப் தொடர் ஆகும். ஈரம், வல்லினம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இந்த வெப் தொடரை இயக்க உள்ளார். திரைப்படங்களைத் திருடி இணையத்தில் வெளியிடும் ஒரு திருட்டுக் கூட்டத்தை மையமாகக் கொண்ட த்ரில்லர் தொடராக இது இருக்கும் என்று தயாரிப்புக் குழு கூறி உள்ளது. மேலும், ஒருவரின் படைப்பை சட்ட…

Read More

ஒரு மொழியில் ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் இருந்தால், அந்த சொற்களுக்கு உரிய பொருளுக்கும் அந்த மொழிக்கும் இடையே நீண்டகால நெருங்கிய தொடர்பு உள்ளது என்று பொருள். அரபு மொழியில் ஒட்டகத்தைக் குறிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன என்பது இதற்கான சிறந்த உதாரணம். தமிழில் சங்ககாலம் குறித்தே மிக அதிக சொற்களால் குறிக்கப்பட்ட ஒரு விலங்கு யானை. தமிழில் யானையைக் குறிக்கக் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. யானையைக் குறிக்கக் கூடிய சில வடமொழிச் சொற்களும் கூட தமிழில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. உதாரணமாக சில சொற்களை பார்க்க வேண்டும் என்றால், அடுங்குன்றம், அத்தி, அரணமத்தம், அருணம், அறுகு, அறுகை, ஆம்பலரி, ஆம்பல், அழுவை, ஆனை, இடறி, இடம்மடி, இருள், உடாலடி, உம்பல், உல்லப்பியம், எயிறு, எருவை, எறும்பி, ஐநகம், ஓங்கல், கடாசலம், கடிவை, கடிறு, கடுமா, கம்பமா, கயம், கரபம், கராசலம், கரி, கருமா, கவளமான், களபம்,…

Read More

நடிகர் அஜித் எளிமையாக ஆட்டோவில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க நடிகர்களில் ஒருவர் அஜித். பிரபல காதாநாயகனாக இருந்தாலும் சக கலைஞர்களுக்கு பிரியாணி சமைத்துப் போடுவது, வாக்குப் பதிவின் போது அமைதியாக மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பது – என்று இவரின் எளிமை அடிக்கடி ஊடகங்களில் செய்தியாவது உண்டு. சமீபத்தில் கூட சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இவர் கால் டாக்ஸியில் வந்தார். அந்த செய்தி வைரலானது. இப்போது இன்னும் எளிமையாக அஜித் முகக் கவசத்துடன் ஆட்டோவில் செல்லும் காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகர், சிறிய ரக விமானங்களை வடிவமைப்பவர், ரேஸ் பிரியர், புகைப்படக் கலைஞர், துப்பாக்கி சுடுதலில் நிபுணர் ஆகியவற்றோடு எளிமை விரும்பி என்பதும் அஜித்தின் அடையாளங்களில் ஒன்று – என்று இதனை அவரது ரசிகர்கள் புகழ்ந்து பகிர்ந்து வருகின்றனர். நமது நிருபர்.

Read More

நடிகர் ஆர்யாவின் சமீபத்திய திரைப்படமான டெடியில் டெடிபியர் பொம்மையின் உடல் மொழியை வெளிப்படுத்திய நடிகர் குறித்து ஆர்யா டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். ஆர்யா, சாயிஷா நடிப்பில் சக்தி சவுந்தர ராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டெடி. ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் இந்தப் படம் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் டெடிபியர் பொம்மைக்கு உயிர் வந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்தக் காட்சிகள் குழந்தைகளால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. அதே நேரம் திரைப்பட ரசிகர்கள் ‘எப்படி இதைச் செய்தார்கள்?’ – என்று யோசித்துக் கொண்டும் இருந்தனர். அந்த ரகசியத்தை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உடைத்து உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ’இவர்தான் காட்சிகளின் பின்னிருந்தவர் – மிஸ்டர் கோகுல். இவர் ஒரு நாடக நடிகர். இவர் டெடிபோன்ற அமைப்பில் உள்ள உடையை அணிந்து கொண்டு, டெடியின் உடல்மொழியை வெளிப்படுத்தினார். டெடியின் முக பாவங்கள் முப்பரிமாணத்…

Read More

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. 4,867 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது. இரண்டு பெரிய கூட்டணிகள் உட்பட ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து முனைப் போட்டி நிலவுகின்றது. இந்த முறை வேட்பு மனுவில் அதிக கேள்விகள் இருந்ததாலும், தவறான தகவல்களைக் கொடுத்தால் வேட்புமனு தள்ளுபடியாகலாம் என்பதாலும் பலர் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து உள்ளனர். ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் போது அவற்றில் எது சரியாக உள்ளதோ அந்த வேட்பு மனு ஏற்கப்படும் – என்ற விதியின் காரணமாகவே இப்படி நிறைய வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று மதியம் 3 மணிக்கு வேட்பு மனுத் தாக்கலுக்கான கெடு நிறைவடைந்தது.…

Read More

இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற மனி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் அடுத்த சீசன் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டது. கொரோனா முடக்கத்தால் வீட்டிற்குள் அடைந்து கிடந்தவர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக அமைந்திருந்தவை வெப் தொடர்கள்தான். கொரோனா முடக்கத்தின் போது திரையரங்குகளும் திறக்கப்படாததால் மக்கள் பலரும் பழைய திரைப்படங்களையும், அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் போன்ற பல்வேறு ஓ.டி.டி. தளங்களையும் பார்வையிட்டனர். இதனால் இந்திய அளவில் ஓ.டி.டி. தளங்களில் வெப் தொடர்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்தது. இதில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்நெட் பிளிக்ஸ்-சில் வெளியான மனி ஹெய்ஸ்ட். அடிப்படையில் இது ஒரு ஸ்பானிஷ் வெப் தொடர். அதிபுத்திசாலியான கொள்ளையன், ஒரு பெரிய வங்கியை கொள்ளையடிப்பதுதான் இதன் ஒருவரிக் கதை. ஏற்கனவே பார்த்து சலித்த ஒருவரிக் கதைதான் என்றாலும், கதை சொல்லும் விதம், காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம், த்ரில், எதிர்பாராத திருப்பங்கள் என்று பார்ப்பவர்களை எழவிடாமல் ஆச்சர்யம் அடைய…

Read More

ரேஷன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்பதற்காக 3 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன – என்ற குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொய்லி தேவி என்பவரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், கொய்லி தேவியின் வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீது முன்வைத்திருந்தார். தனது கட்சிக்காரர் கொய்லி தேவியின் ரேஷன் அட்டையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்பதற்காக ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் கொய்லி தேவியின் 11 வயதே ஆன மகள் சந்தோஷி குமாரி கடந்த 2017ல் பட்டினிச் சாவை சந்தித்ததாகவும் கூறிய அவர், இப்படியாக நாடெங்கும் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேஷன் அட்டைகளை மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். மேலும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளைப் போலியானவை என்று சொல்லி மத்திய அரசு நீக்கிவிட்டதாகவும்,…

Read More

விரைவில் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும், ஆனால் ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று நிதின் கட்கரி அறிவிப்பு. இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி சுங்க சாவடிகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், சுங்கச் சாவடிகளே இல்லாத நிலையை ஏற்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளதாகவும், இதன்படி சுங்கச் சாவடிகளில் வண்டிகள் நின்று கட்டணம் செலுத்தும் வழிமுறைக்கு மாற்றாக ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணங்களைப் பெறும் வழிமுறைகளை ஓராண்டுக்குள் அமல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். இதன்படி ஒவ்வொரு சாலையிலும் அதன் தொடக்கப் பகுதி மற்றும் முடிவுப் பகுதியில் கேமராக்கள் இருக்கும் என்றும், அந்தக் கேமராக்களில் பதிவாகும் படங்களின் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும்…

Read More

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்! இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் நடந்த திருமண புகைப்படங்களை வெளியிட்டார். இந்திய அணியின் நம்பிக்கைக்கு உரிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரிட் பும்ரா. இவர் சமீபத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, கடந்த டி 20 தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார். அந்நேரத்தில் பும்ரா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், பிரபல மலையாள நடிகை ஒருவரே பும்ராவின் வருங்கால மனைவி என்றும் பல வித செய்திகள் பரவின. சமீபத்தில், மார்ச் 15ஆம் தேதியன்று பும்ராவுக்கு கோவாவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், ஆனால் மணப் பெண் கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் என்றும் மீண்டும் செய்திகள் பரவின. இவற்றில் எது உண்மை எது பொய்? – என்று ரசிகர்கள் குழம்பிய நிலையில், தனக்கும்…

Read More