அனுமதி பெறாமல் விளம்பரம்: செல்போன் செயலிக்கு எதிராக பொங்கிய சசி தரூர்

SHARE

தனது பெயரையும் புகைப்படத்தையும் அனுமதியின்றி பயன்படுத்திய செல்ஃபோன் செயலிக்கு காங். தலைவர் சசி தரூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிளாக்போர்ட் ரேடியோ என்ற ஆங்கில மொழி கற்பிக்கும் செல்போன் செயலியானது, தனது  விளம்பரத்தில் ’speak English as fluently as shashi tharoor’ என்று விளம்பரப்படுத்தி இருந்தது. அப்படி என்றால், ”சசி தரூர் போல சரளமாக ஆங்கிலம் பேசலாம்” என்பது அர்த்தமாகும்.

கொஞ்ச காலமாக நெட்டில் உலாவிக்கொண்டிருந்த இந்த விளம்பரத்தை ஒருவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சசி தரூரின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதனை கண்டதும் உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கும் தனக்கும் தொடர்பில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் சசி தரூர். ”இந்த செயலிக்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, இதனை நான் அங்கீகரிக்கவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். வணிக நோக்கங்களுக்காக எனது பெயரையும், புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்துவதை நிறுத்த சட்ட நடவடிக்கை எடுப்பேன் “ என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சசி தரூரின் இந்த பதிவுக்கு சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஒரு பயனர், ’அந்த விளம்பரத்தில் எடுத்துக்காட்டாகவே உங்களைப் பயன்படுத்தி உள்ளனர், இளைஞர்களை ஆங்கில மொழியின் திறமையான பேச்சாளர்களாக ஊக்குவிக்க முயற்சிப்பதே அந்த விளம்பரம்,  அவர்கள் உங்களை இழிவுபடுத்தவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு  பயனர் ’பிரபலங்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்துவது வரம்பு மீறல்’ என்றும் பதிவிட்டுள்ளார். 

சசி தரூர் அரசியல் தலைவர் என்பதைக் காட்டிலும் ஆங்கிலத்தில் சிறந்த பேசாளர் மற்றும் எழுத்தாளர். அவரது எழுத்தில் வெளியான The Great Indian Novel, An Era Of Darkness, Why I Am a Hindu போன்ற புத்தகங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் பரவலான விற்பனையைப் பெற்றுள்ளன.

சே.கஸ்தூரிபாய்

Saving the oaths I swore to the Crown and to, umm, Apollo Physician.
SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

உங்கள் தகவலை பேஸ்புக்கிடம் கொடுக்கமாட்டோம் இறங்கிவந்த வாட்ஸ்அப் !நிறுவனம்

Admin

என்ன நேருவின் படம் இல்லையா ? – கொந்தளித்த காங்கிரஸ்

Admin

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

மீண்டும் சிலிண்டர் விலை அதிகரிப்பு… 1000 ரூபாயை நோக்கி சிலிண்டர் விலை… அதிர்ச்சியில் மக்கள்…

Admin

இந்தியாவுக்குள் மீண்டும் நுழைகின்றதா டிக்டாக்?

Admin

பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு.. 25 நிமிடங்கள் பேசியது என்ன?

Admin

Leave a Comment