முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

SHARE

திரைப்படத் தயாரிப்பில் பெரிதும் அறியப்பட்ட ஏவி.எம் நிறுவனம் வெப் தொடர் தயாரிப்பில் களம் இறங்கி உள்ளது.

தமிழ்த் திரையுலகில் 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து  வெற்றிகரமாக  இயங்கி வரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்தான் ஏவி.எம். புரொடக்‌ஷன்ஸ். தரமான  திரைப்படங்களை குடும்பத்தோடு ரசிக்கும்படி கொடுப்பதே ஏ.வி.எம் நிறுவனத்தின் தனித்துவம். சமீபத்திய ஆண்டுகளில் திரைப்படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஏவி.எம் நிறுவனம் தற்போது தனது அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்து உள்ளது.

அந்த அறிவிப்பின்படி  “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற வெப் தொடரை ஏவி.எம் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது இவர்களின் முதல் வெப் தொடர் ஆகும். ஈரம், வல்லினம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இந்த வெப் தொடரை இயக்க உள்ளார். திரைப்படங்களைத் திருடி இணையத்தில் வெளியிடும் ஒரு திருட்டுக் கூட்டத்தை மையமாகக் கொண்ட த்ரில்லர் தொடராக இது இருக்கும் என்று தயாரிப்புக் குழு கூறி உள்ளது.

மேலும், ஒருவரின் படைப்பை சட்ட விரோதமாக திருடுவது மிகப்பெரிய திருட்டாகும். இது ஒவ்வொரு படைப்பாளர்களுக்கும் மிக பெரிய கவலையாக உள்ளது. இந்த வெப் தொடர் அந்த திருட்டு கும்பலின் உண்மை முகத்தை வேர் வரை சென்று அடையாளம் காட்டி உள்ளது. இந்த வெப் தொடர் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு வெப் தொடராக இருக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த வெப் தொடரின் மூலம் ஓடிடி பயணத்தை சோனி லைவ் தளத்தில் விரைவில் தொடங்குகிறது ஏ.வி.எம் நிறுவனம்.

சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

மகசூல் – பயணத் தொடர்- பகுதி 3

Pamban Mu Prasanth

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

அட பாவி நான் உயிரோட இருக்கேன்யா: அதிர்ந்துபோன சித்தார்த் காரணம் என்ன?

Admin

வழியெங்கும் வாக்குவாதம்… சென்னை கொண்டு வரப்பட்டார் மீரா மிதுன்…

Admin

ஆட்டோவில் செல்லும் அஜித்: இணையத்தைக் கலக்கும் வீடியோ

Admin

மகசூல் – பயணத் தொடர்… பகுதி 1

Pamban Mu Prasanth

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

டிவி தொகுப்பாளினியாக களமிறங்கும் பிரபல நடிகை…!!!

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment