- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வழிமுறைகள் குறித்தும் ஆராய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவின் உறுப்பினர்களாக மருத்துவர்கள் ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் சட்டத்துறை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்கக கூடுதல் இயக்குனரும் குழுவில்…
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்க உள்ளதாகவும் தகவல்…
ஒரே சமயத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் வெவ்வேறு இயக்குனர்களுடன் நடிகர் ஜெய் இணைகிறார் . 2002 ஆம் ஆண்டு பகவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெய், சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஜருகண்டி என்ற திரைப்படத்தில் பாடகராக அறிமுகமான ஜெய், சுசீந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் திரைப்படத்தில் ஹீரோவாகவும், இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி யின் திரைப் படத்தில் வில்லனாகவும் ஜெய் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் அட்லீயின் திரைப்பட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் சுந்தர் சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டெக் உலகின் ஜாம்பவான், கூகுளில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியர், சுந்தர் பிச்சையின் பிறந்த தினம் இன்று. அவரை பற்றி விளக்குகின்றது இந்த தொகுப்பு.. மதுரையில், டி.வி கூட இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் சுந்தர்பிச்சை. அவரது குடும்பம் சிறுவயதிலேயே சென்னை அசோக் நகர் பகுதியில் குடிபுகுந்தது. நண்பர்கள் மத்தியிலும் அளவாகவே பேசும் சுபாவம் கொண்ட சுந்தருக்கு, ஆரம்ப காலத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கி வெற்றி வாகை சூடியிருக்கிறார். ஆனால் கனவைத் துரத்த குடும்பச் சூழல் ஏதுவாக இல்லை. குடும்பத்திற்காக வருமானம் ஈட்டவேண்டிய நிலை இருந்தது. படிப்பில் கவனம் செலுத்தினார். சுந்தர் பிச்சை வகுப்பில் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்எல்லாம் கிடையாது. ஆனால், எண்களை மனப்பாடம் செய்தல், அறிவியல் விநாடி – வினா, புதிர்களுக்கு விடை காணுதல் இவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சின்ன வயதில் வீட்டில் முதன் முதலாக…
ஜம்மு-காஷ்மீரில், நிறைமாத கர்ப்பிணியான மருத்துவர் ஒருவர் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகிறார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்த போது , பலர் தீவிர தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் கர்ப்பணி மருத்துவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் இதில் தொற்று பாதித்து சுமார் 650 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் கர்ப்பிணி மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. கத்துவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஷிவானி என்ற 8 மாத கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் தொற்றின் தீவிரத்தையும் பொருட்படுத்தாது தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறார். தற்போதைய இந்த நிலை தனக்கு சற்று மனஅழுத்ததை கொடுத்தாலும், மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக அதனை தான் செய்து வருவதாகவும், இதில் தனக்கொன்றும் பிரச்னை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவு அதிகப்பட்சம் ரூ.450 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவர்கள், செவிலியர்களின் ஒரு நாள் உணவு செலவிற்காக ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கு ஒரு நாள் உணவு செலவு அதிகப்பட்சம் ரூ.450 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூறினார் பிரசித்தி பெற்ற உணவகங்கள் மூலமாக தரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. இன்னும் 2 நாட்களில் தடுப்பூசி வரவுள்ளது. அவ்வாறு தடுப்பூசி வந்த பின் பிரித்து மாவட்ட வாரியாக தடுப்பூசி போடப்படும் என்றார்.
தென்கொரியாவில் பூனை ஒன்று தனது கால்களால் நம்பர் லாக் போட்டு வீட்டை திறந்து உணவு திருடும் வீடியோ வைரலாகி வருகிறது. முன்பெல்லாம் வீட்டில் பூனை வளர்க்க அதிக நாட்டம் காட்டமாட்டார்கள், ஆனால் தற்போது பணம் கொடுத்து பூனை வாங்கி வளர்க்கும் வழக்கம் வந்துவிட்டது.பூனை செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பூனை ஒன்று தனது கால்களால் நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் வீட்டை நம்பர் லாக் பூட்டில் பூட்டி விட்டு வெளியே செல்கிறார். இதையடுத்து பூனை ஒன்று, வீட்டின் உரிமையாளர் போட்ட நம்பர் லாக்கை தனது காலால் அழுத்தி வீட்டை திறந்து உள்ளே செல்கிறது. பின்னர் வீட்டில் இருக்கும் உணவுகளை தேடி சாப்பிடுகிறது. இந்த நிகழ்வு குறித்து பேசிய வீட்டின் உரிமையாளர், பல முறை பூனையை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் தனது…
கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலையில் சிக்கி தவிக்கின்றனர். 3 ஆம் அலை 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் முன்றாம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ள, விரல்களில் ஆக்சிமீட்டரை பொறுத்தி 6 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வைக்க வேண்டும். இதில் குழந்தைகளின் ஆக்சிஜன் அளவு அதீதமாக குறையும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க…
இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் 50% பேர் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கில் ஆபாச படம் பார்த்ததாக தரவுகள் தெரிவித்துள்ளன. கொரோனா முதல் அலை பரவலால் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இந்த நேரத்தில் வீடுகளில் முடங்கியிருந்த பொதுமக்கள் போன்களில் நேரத்தை செலவிட்டனர். இதனிடையே ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் வீடியோ தளங்களை முறைப்படுத்தும் விதமாக ஆன்லைன் அடல்ட் கன்டென்ட் தொடர்பாக ஆய்வு தரவு ஒன்றை வெளியிட்டுள்ள மீடியா ரெகுலேட்டர் அப்காம் நிறுவனம், இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் ஆபாச வலைத்தளம் மற்றும் செயலிகளை உபயோகித்துள்ளதாக கூறியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 26 மில்லியன் பேர் இந்த வலைத்தளம் மற்றும் செயலிகளை பயன்படுத்தி உள்ளனர். இதில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த மொத்த எண்ணிக்கையில் 4இல் 3 பங்கு பேர் 13 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.
அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் ஒரே ஆட்டோவில் குழுவாக அமர்ந்து சென்ற புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக பிரமுகரும், சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு உயிரிழந்தார். அவரின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் ஒரே ஆட்டோவில் பயணம் செய்தனர். கொரோனா தளர்வு விதிகளில் தமிழக அரசு ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஒரே சீட்டில் மூன்று பேர் அமர்ந்து பயணம் செய்திருப்பது விதிகளை மீறிய செயலாகும். இதனையடுத்து அது குறுகலான தெரு என்பதால் ஆட்டோவில் சென்றோம் என அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
