தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு…. கூடுதல் தளர்வுகள் வழங்க பரிந்துரை

SHARE

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Admin

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

ஏசி வசதியோடு இயங்கும் அரசு பள்ளி… தலைமை ஆசிரியையின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலைமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

உள்ளாட்சி தேர்தல் எப்போது ? முதல்வர் ஆலோசனை

Admin

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் …. கமல்ஹாசன்

Admin

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்… சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல்

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

Leave a Comment