- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
ஓடிடி தளத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகவுள்ளதால் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் படக்குழுவினர் உரையாடவுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்தாண்டு மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் இந்த வாரம் வெளியாகவுள்ளதால் ஜூன் 17 மாலை 4 மணிக்குச் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடவுள்ளார்கள் படக்குழுவினர். நெட்பிளிக்ஸ் இந்தியா ஓடிடி நிறுவனத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் ஆகிய சமூகவலைத்தளங்களில் இந்த நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாவை பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும் என்று முழங்கிய சேகுவேரா பிறந்த தினம் இன்று. அவரை பற்றி விளக்குகின்றது இந்த தொகுப்பு.. ‘சே குவேரா’ என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவேரா 1928 ஜூன் 14-ம் நாள், அர்ஜென்டினா நாட்டின் ரோசாரியோவில் பிறந்தவர். வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1952-ல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவர். பிற்காலத்தில், ‘லட்சிய வீரர்’ என்று உலகளவில் பெயரெடுத்தார். மாணவப் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபடவும் ஆரம்பித்தார். சே குவேராவின் வீட்டில் 3,000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் தான் இவருக்கு புரட்சி தீ வளரகாரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ் (Karl Heinrich Marx), போல்க்னர், வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் சே வுக்கு சிறப்பான ஆர்வம் இருந்தது.…
21 வயதேயான இந்திய வம்சாவளி பெண் பிரிட்டனின் உயரிய விருதினை பெற்றுள்ளார். கேரளாவை பிறப்பிடமாக கொண்டவர் அமிகா ஜார்ஜ். இவர் 17 வயதில் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, மாதவிடாய் காரணமாக ஏழை எளிய மாணவிகள் பலர் வகுப்புக்கு வராமல் இருந்துள்ளனர். இதனை குறிப்பிட்டு, பள்ளி, கல்லூரிகளில் இலவச நேப்கின்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமிகா அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதன்பயனாக கடந்த 2020ம் ஆண்டு கல்வி நிறுவனங்களுக்கு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில், இவரது செயலை பாராட்டி, ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு பிரிட்டனின் மிக உயரிய, பிரிட்டிஷ் பேரரசின் உறுப்பினர் வரிசைக்கான (Member of the Order) விருது வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் தளர்வில்லாத 11 மாவட்டங்களில் தற்போது மாணவர் சேர்க்கை இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.கொரோன பாதிப்பு உள்ள, தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என அவர் தெரிவித்தார். மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு ஒரு வாரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் இரண்டு தவணையாக வசூலிக்க வேண்டும். மாணவர்களை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளை தொடங்குவது பற்றியும் தற்போது யோசிக்கவில்லை. கொரனோ பரவல் குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். ஆன்லைனில் கல்வி, கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள்…
கொரோனா தொற்று பாதித்த குழந்தைகளை வயது முதிர்ந்தவர்களிடம் நெருங்க அனுமதிக்க வேண்டாம் என ஆயூஷ் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மரபணு மாறிய வைரஸால் முதியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், குழந்தைகளின் நலன் கருதி ஆயுஷ் அமைச்சகம் அவர்களுக்கென வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் அடிக்கடி கைக்கழுவதை உறுதி செய்யும்படி பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்றும், அதற்கு கீழான வயதினர் பெற்றோர் மேற்பார்வையில் தேவைப்பட்டால் அணிந்துகொள்ளலாம் என கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது உடற்பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு பெற்றோர் இயற்கையான ஆயூர்வேத மருந்துகளை பயன்படுத்துவதோடு, அடிக்கடி மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனைகளை பெற்று செயல்படலாம் எனவும் கூறியுள்ளது.
கிஷோர் கே சாமியை கைது செய்தது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவது போன்று உள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணையத்தளங்களில் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமியினை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், கிஷோர் கே சாமியை கைது செய்ததை கண்டித்து, பாஜக மாநில துணை தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் தனது ட்வீட்டர் பதிவில்: திமுக குடும்பத்தை,அதன் தலைவர்களை விமர்சிப்பது குற்றமெனில்,கருத்து சுதந்திரத்திற்கு இங்கு இடமேது? இதே அளவுகோல் பல தலைவர்களை கேலி பேசுவோருக்குஉண்டா?பொதுவாழ்க்கையில் மனஉறுதி முக்கிய பண்பு திமுகவிற்கு அது இல்லை போல.கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்காதீர் என பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலில் 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்து நப்தாலி பென்னட் பிரதமராக பதவியேற்றுள்ளார். இஸ்ரேல் நாட்டில் 2009,முதல், பெஞ்சமின் நெதன்யாகுதான் பிரதமராக இருந்து வருகிறார் அங்கு கடந்த 2 ஆண்டுகளாக எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில், அதிக இடங்களை பெஞ்சமின் நெதன்யாகு கட்சி பிடித்தது. ஆனால், அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறியான நிலை நீடித்தது. இதற்கிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கை கோர்த்து ஆட்சி அமைக்க திட்டமிட்டனர். இந்த நிலையில்கூட்டணிக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது. 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன ஒரு உறுப்பினர் வாக்களிக்க கல்ந்து கொள்ளவில்லை. ஆகவே…
நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது கடந்த ஆண்டு ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்த போது கொரோனா பரவல் ஏற்பட்டது.இதனால் அவரின் அமெரிக்க பயணம ரத்தானது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை குறைந்து இருப்பதால் ரஜினி சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கொரோனா காலம் என்பதால் சிறப்பு விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அவருடன் குடும்பத்தினரும் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறப்பு தனி விமானத்தில் செல்வதற்காக மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்பதால், அதற்கான அனுமதியினை ரஜினி தற்போது பெற்றுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் வல்லமை மக்களுக்கு உண்டு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா பரவல் குறைந்து தான் வருகிறது தவிர, முழுவதுமாக ஒழியவில்லை.எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் போலி மதுபானம் தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு விமர்சனங்களையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். விரைவில் முழு ஊரடங்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறிய அவர், பொது போக்குவரத்து தொடங்க வேண்டும் என்றும், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்ததாக 2 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சுவாமி ட்விட்டரில் திமுக தலைவர்களை தொடர்ந்து மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தார். இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அளித்த புகாரில், கிஷோர் கே சுவாமி சமூக வலைத்தளங்களில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தாம்பரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கிஷோர் கே சுவாமிக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து…
