Author: Admin

சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. யூடியூப் சேனலில் பெண்கள் குறித்த ஆபாசமாகப் பேசிய பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மதனை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்ட நிலையில் தர்மபுரியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தலைமறைவானார் மதன். யாருக்கு தெரியாமல் பதுங்கியிருந்த மதனை வெள்ளிக்கிழமை கைது செய்த காவல் துறையினர்அவரிடமிருந்து இரு கார்கள், 3 மடிக்கணினிகள், ஒரு “டிரோன் கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மதனை கைது செய்த காவல்துறையினர், சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனின் 5 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டு வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Read More

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் வாள் வீச்சு பிரிவில் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பொருமையை பெற்றுள்ளார் பவானி தேவி. தமிழகத்தின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார் பவானி தேவி பவானி தேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்தபோட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும், சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார். அவரின் கோரிக்கையைப் ஏற்ற தமிழக அரசு சென்னையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார் இந்த நிலையில் இத்தாலியில் பயிற்சி பெறும் பவானி தேவி தனக்கு நிதி வழங்கிய தமிழக…

Read More

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால் அது சாத்தியமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்துமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில்,அனைத்து மாநிலங்களுக்கான மாநில பேரிடர் மொத்த ஒதுக்கீடு ரூபாய் 22,351 கோடி. அதே சமயம் கொரோனா தொற்றால் இதுவரை 3.85 லட்சத்திற்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக் கூடும் ஆகவே கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால் மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியதாகிவிடும். இதனால் கூடுதல் நிதி சுமையால் சுகாதாரம் மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதி குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Read More

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை குத்து சண்டை வீரர் அண்டர்டேக்கர் சண்டைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘கில்லாடியோன் கா கில்லாடி’ படத்தில் பிரபல தொழில்முறை குத்துச்சண்டை வீரரான அண்டர்டேகருடன் நடிகர் அக்‌ஷய் குமார் மோதுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அண்டர்டேகர் வேடத்தில் நடித்திருந்த நடிகரை அக்‌ஷய் குமார் அடிக்கும் அந்தக் காட்சிக்கு படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை நினைவுகூறும் விதமாக ரசிகர்கள் பல்வேறு மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில், அண்டர்டேகரை இதுவரை வீழ்த்தியவர்கள் என்கிற பட்டியலில் ரோமன் ரெய்ன்ஸ், பிராக் லெஸ்னர், ட்ரிபிள் ஹெச் ஆகியோருடன் அக்‌ஷய் குமார் புகைப்படத்தை இணைத்து உருவாக்கியிருந்த ஒரு மீம்ஸ் வைரலானது. இதனை அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அப்பதிவைக்கண்ட அண்டர்டேக்கர், “உண்மையான…

Read More

தமிழகத்தில் இதுவரை 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனோ இரண்டாவது அலை பரவல் மற்றும் அதன் தாக்கம் குறித்து சுகாதாரத் துறை வல்லுனர்கள் சார்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி இதுவரை 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்,70 சதவீதம் B.1.617.2 என்ற டெல்டா வகை உருமாறிய கொரோனோ கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர B.1.1.7 என அழைக்கப்படும் ஆல்பா வகை கொரோனோ 47 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.. அதில் 12 வயதுக்கும் மேற்பட்டோரிடையே டெல்டா வகை கொரோனோ 81% மற்றும் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளிடையே 19% கண்டறியப்பட்டுள்ளது. சமூகப் பரவல்…

Read More

கொரோனா வைரசின் மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம். எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டுமென மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எழும்பூர் மருத்துவமனையை ஆய்வு செய்த மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது , கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது உண்மையல்ல. அனைத்து வயதினருக்கும் பாதிக்கும். இரண்டாம் அலை மற்றும் முதல் அலையிலும் கூட குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இந்த அலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லை என்பதினால் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கபடலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும். மேலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதிகளுடன் குறைந்தது 100 படுக்கைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 25 படுக்கைகள்…

Read More

திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை,நாளை முதல்முறையாக கூடுகிறது. தமிழ்நாட்டில், சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் பல்வேறு துறை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சட்டப்பேரவை தலைவராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில், ஆளுநர் உரையுடன் நாளைத் தொடங்குகிறது.  அதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கிலேயே நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சட்டப்பேரவைக்கு வரும் அனைத்து எம்.எல்.ஏக்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Read More

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்துள்ளனர்.அதிலும் சிறப்பான இணைப்பாக இப்படத்தில் சமந்தா இணைந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர்கள் மூவரின் கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்து பேசிய விக்னேஷ் சிவன், இந்த படத்தின் பாடல் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு வரும் ஜூலை மாதத்தில் படத்தின் அடுத்த சிங்கிள் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தற்போது குறைப்பது சாத்தியம் இல்லை, என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல், டீசல் விலையில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை ஒன்றிய அரசே எடுத்து கொள்வதாக குற்றம் சாட்டினார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாயாக இருந்த வரியை 32 ரூபாய் 90 காசுகளாக, ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதால் மாநில அரசுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறினார். மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் தமிழக அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை விடப்படும் என தெரிவித்தார்

Read More

தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகளுடன், ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வரும் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், கீழேயும் மாவட்டங்களுக்கு உள்ளேயும் 50 % இருக்கைகளுடன் பொது போக்குவரத்து சேவை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 50% பயணிகளுடன் மெட்ரோ சேவையும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More