‘கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என நம்ப வேண்டாம் ’’ – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

SHARE

கொரோனா வைரசின் மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம். எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டுமென மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எழும்பூர் மருத்துவமனையை ஆய்வு செய்த மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது , கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது உண்மையல்ல. அனைத்து வயதினருக்கும் பாதிக்கும். இரண்டாம் அலை மற்றும் முதல் அலையிலும் கூட குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த அலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லை என்பதினால் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கபடலாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும்.

மேலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதிகளுடன் குறைந்தது 100 படுக்கைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 25 படுக்கைகள் தீவிர சிகிச்சைக்காக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உன்னால் முடியாது தம்பி காணொலி சர்ச்சை. மக்கள் நீதி மய்யத்துக்கு நக்கலைட்ஸ் வலைக்காட்சி பதில்.

இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

நடிகர் ஆர்யா மோசடி செய்யவில்லை… ஜெர்மனி பெண் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்..

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Admin

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Admin

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

Leave a Comment