- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021க்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம், நிலைக்குழு அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்தில் நான்காவதாக இடம்பெற்றுள்ள திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது, ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு மத்திய அரசு கூட அதை திருத்த முடியாது. ஆனால், இப்போது தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழுவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலாம் என்ற திருத்தம் இடம்பெற்றுள்ளது. இந்த மசோதாவுக்கு திரையுலகினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஷால் உள்ளிட்ட பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில்…
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ள நிலையில் அந்த வழக்கிலும் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்தவரும், தனியார் பள்ளி பகுதிநேர பயிற்சியாளருமான கெபிராஜ் மீது கேரள மாணவி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை மே மாதம் 30 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கெபிராஜை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். கெபிராஜின் பயிற்சி மையம், வீடு ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவர் பயன்படுத்திய கணினியின் சி.பி.யூ, செல்போன்,…
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள், திரையுலகினர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருமணமாகி 15 ஆண்டுகளில் நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம். எங்கள் உறவு உண்மையாக வளர்ந்தது.எங்கள் இருவரிடமும் நம்பிக்கை, மரியாதை மற்றும் பாசம் ஆகியவை இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன் – மனைவியாக இல்லாமல் தங்களது மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோராக இருக்க முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டு அமீர்கான் தனது மனைவி கிரணை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். நடிகர் அமீர்கான் கடந்த 2005ம் ஆண்டு கிரணை திருமணம் செய்தார் என்பதும் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வருகிறது…
அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 37.71 லட்சம் பேர் மீறியதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனிமனித இடைவெளி , முக கவசம் அணிதல், பொது இடங்களில் உமிழ்நீர் துப்ப தடை ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விதித்துள்ளது. இதனை மீறி செயல்படும் கடைகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது காவல்துறை , உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தமிழ்நாடு அரசின் பொது சுகாதார துறை சட்டத்தின் கீழ் அபராதம் வசூலித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 மார்ச் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் 22.99 லட்சம் நபர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.52.78 கோடி அபராதம் பெறப்பட்டது. இந்நிலையில் கொரோனோ இரண்டாவது அலை பரவல் மற்றும் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களில் தொடர்ந்து…
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டவை, தடை செய்யப்பட்டவை குறித்து காண்போம். இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா இரண்டாம் அலையின் பரவல் குறைந்து வருவதால் சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கில் 3 விதத்தில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி ஒரே மாதிரியான தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில வாரமாக அதிகளவு கொரோனா தொற்றுக் காணப்பட்ட கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக் குறைந்துள்ளதால் விரைவில் தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அளித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தலாம், ஆனால் இதில் பங்கேற்கும் அரங்கு உரிமையாளர், பணியாளர்கள், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மாவட்டங்களுக்கு…
மத்திய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை 2021 கொண்டு வர உள்ளது. இதற்கு திரை உலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ் திரைத்துறையினரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்னறர். நடிகர் சூர்யா இச்சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார். சட்டம் மக்களை காக்கவேண்டும், குரல்வளையை நெரிக்கக்கூடாது என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில்நடிகர் கார்த்தியும் ஒன்றிய அரசு இந்த சட்டத்தில் மேற்கொள்ள உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பதிவில், எப்போது வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்யும் இந்த சட்ட திருத்தத்தம் வியாபார ரீதியாக ஒவ்வொரு படத்தையும் பாதிக்கக்கூடும். அதனால் இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும். இது ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையைநசுக்கும் விதமாக உள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்
சேவை கட்டணத்தை உயர்த்துவதற்கு தயாராகவே இருக்கிறோம் என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், பெரிய அளவுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது திட்டமில்லை என்றும் சந்தையின் நிலவரத்துக்கு ஏற்பவே கட்டணத்தை உயர்த்த இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும் கட்டணத்தை உயர்த்துவது என்பது தவறான நடவடிக்கை அல்ல. குறைந்தபட்சம் கட்டணத்தை முந்தைய நிலைக்காவது உயர்த்த வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒருவரை அழித்து ஒருவர் வாழ்வது? அனைவரும் நிலைத்திருக்க வேண்டும் என்றால் பழைய நிலைமைக்கு கட்டணம் திரும்ப வேண்டும்” என்று சுனில் பார்தி மிட்டல் தெரிவித்திருக்கிறார். நாங்கள் மட்டும் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. மற்ற நிறுவனங்கள் இணையும்போது தான் கட்டணத்தை உயர்த்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் எதிராக கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை தற்போது அனுமதியளித்துள்ளது. நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி கோவின் செயலில் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றோ கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
சிறிய குட்டையில், புலிக்கு டிமிக்கி கொடுத்த வாத்தின் வீடியோ ஒன்றை பதிவிட்டு, தொழில் பாடம் புகட்டியுள்ளார் ஆனந்த் மஹிந்திரா. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டரில் ஒரு வீடியோ இன்றை பகிர்ந்துள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த், அடிக்கடி சிந்திக்க தூண்டும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் குளத்தில் வாத்து ஒன்றினை புலி வேட்டையாட துடிப்பதும், ஆனால் வாத்தோ புலிக்கு டிமிக்கு கொடுத்து நீரில் மறைந்து செல்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ மூலம் தொழில் பாடம் புகட்டிய ஆனந்த் மஹிந்திரா, புது வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி இதுபோலவே சிறு நிறுவனங்களை பெரு நிறுவனங்கள் துரத்தி கைப்பற்ற துடிப்பதாக கூறியுள்ளார்.
புதிய ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம், நிலைக்குழு அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்தில் நான்காவதாக இடம்பெற்றுள்ள திருத்தத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது, ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு மத்திய அரசு கூட அதை திருத்த முடியாது. ஆனால், இப்போது தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழுவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலாம் என்ற திருத்தம் இடம்பெற்றுள்ளது. இந்த திருத்தங்கள் தொடர்பான கருத்துகளை, பொதுமக்கள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்க இன்றே கடைசி நாள். இந்த மசோதாவுக்கு திரையுலகினர் மத்தியில் கடும் எதிர்ப்பு…
