பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள், திரையுலகினர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருமணமாகி 15 ஆண்டுகளில் நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம்.
எங்கள் உறவு உண்மையாக வளர்ந்தது.எங்கள் இருவரிடமும் நம்பிக்கை, மரியாதை மற்றும் பாசம் ஆகியவை இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன் – மனைவியாக இல்லாமல் தங்களது மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோராக இருக்க முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டு அமீர்கான் தனது மனைவி கிரணை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் அமீர்கான் கடந்த 2005ம் ஆண்டு கிரணை திருமணம் செய்தார் என்பதும் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.