தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 37 லட்சம் பேர்…இதுவரை ரூ.67 கோடி வசூல்..

SHARE

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை 37.71 லட்சம் பேர் மீறியதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தனிமனித இடைவெளி , முக கவசம் அணிதல், பொது இடங்களில் உமிழ்நீர் துப்ப தடை ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விதித்துள்ளது.

இதனை மீறி செயல்படும் கடைகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது காவல்துறை , உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தமிழ்நாடு அரசின் பொது சுகாதார துறை சட்டத்தின் கீழ் அபராதம் வசூலித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2021 மார்ச் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் 22.99 லட்சம் நபர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.52.78 கோடி அபராதம் பெறப்பட்டது.

இந்நிலையில் கொரோனோ இரண்டாவது அலை பரவல் மற்றும் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களில் தொடர்ந்து அரசின் விதிகளை மீறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால் தற்போது தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 37.71 லட்சம் நபர்கள் மீது அரசின் பொது சுகாதாரத் துறை சட்டம் மூலமாக ரூ.67.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டுவந்தது நாம்தான்: பிரதமர் நரேந்திர மோடி

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

திமுகவுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்..!!!

Admin

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Admin

11 மாவட்டங்களில்மாணவர் சேர்க்கை நடைபெறாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

திமுகவின் 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை…எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Admin

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியலை தாங்க ஸ்டாலின்… வானதி சீனிவாசன் போராட்டம்

Admin

சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin

Leave a Comment