பாசிச போக்கு… ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவுக்கு உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு!

SHARE

ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021க்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம், நிலைக்குழு அறிக்கையை சமா்ப்பித்தது.

தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்தில் நான்காவதாக இடம்பெற்றுள்ள திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதாவது, ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு மத்திய அரசு கூட அதை திருத்த முடியாது. ஆனால், இப்போது தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழுவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலாம் என்ற திருத்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த மசோதாவுக்கு திரையுலகினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஷால் உள்ளிட்ட பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் திரைத்துறையை சேர்ந்தவராக உதயநிதி ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதில்,
ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021′ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று காட்டமாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை – சிறுவனை சந்திக்க நேரம் ஒதுக்கிய விஜய்

Admin

சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு!

Admin

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

தனுஷால் கெத்து காட்டிய “வேலை இல்லா பட்டதாரி”கள்…டிவிட்டரில் கொண்டாட்டம்

Admin

பிரமாண்ட படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா ஷாலினி..?

Admin

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்!

Admin

ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

ரூ.1.3 கோடிக்கு கார்!: குக் வித் கோமாளி குழுவினர் குதூகலம்…

Admin

நடிகர் விவேக் மரணம்… விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

Admin

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : மேல்முறையீடு செய்கிறாரா நடிகர் விஜய்?

Admin

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

Leave a Comment