Author: Admin

ஜியோ நிறுவனம் தங்களது பயனாளர்களுக்கு அவசரகால டேட்டா பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக உள்ள ஜியோ, அவ்வப்போது பயனாளர்களை கவர கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ரீசார்ஜ் செய்ய பணம் இல்லாமலும்,பணம் இருந்தும் ரீசார்ஜ் செய்ய முடியாமலும் இருப்பவர்களுக்கு 5 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இதனை முதலில் ஜியோவின் டேட்டா கூப்பனான ரூ.11 என கடன் வீதத்தில் பெற்றுக் கொள்ளலாம். பின் கடன் தொகையை கட்ட வேண்டும் என்பது விதியாக உள்ளது.

Read More

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழக அரசு புதிய தகவல்களுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது. அந்தவகையில் உணவகங்கள், டீ கடைகள், விடுதிகள், தங்கும் விடுதிகள் 50% பேருடன் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை இயக்கப்படும்.டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மாவட்டங்களுக்கு இடையேயான இ பாஸ் முறையை ரத்து மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கல்வி நிலையங்கள், நீச்சல் குளங்கள், உயிரியல் பூங்காக்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

கடந்த ஆட்சியில் தீபாவளிக்காக ராஜேந்திர பாலாஜி ஒன்றரை டன் இனிப்புகளை ஆவினில் இருந்து பெற்றுள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் குற்றச்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை மையங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆவின் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, சேலம் ஆவின் பால் பண்ணையிலும் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் தமிழகத்தில் தற்போது பால் வரத்து 1.5 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது அதேபோல் விற்பனையும் ஒன்றரை லட்சம் அதிகரித்துள்ளதாக கூறினார். அதே சமயம் கடந்த ஆட்சியில் ஆவின் மோசடியில் நடந்த மோசடி மட்டும் 234 கோடி எனவும். இதில் ஆவின் பால்பண்ணையில் பெரிய ஊழல் நடந்துள்ளதாக கூறினார். மேலும், கடந்த ஆட்சியில் ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1.5 டன் அதாவது 1,500 கிலோ ஆவின் ஸ்வீட் இலவசமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஆதாரம் சிக்கியுள்ளதால் தவறு செய்தவர்கள்…

Read More

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அக்டோபரில் மூன்றாவது அலை உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக தினசரி 4 லட்சம் பாதிப்புகள் என பதிவான நிலையில் தற்போது 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே கணிப்பதற்காக மத்திய அரசு அமைத்த 3 பேர் கொண்ட விஞ்ஞான குழு தெரிவித்துள்ள தகவலில் இந்தியாவில் மூன்றாவது அலை கொரோனா பரவினால் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் உச்சமடையும் என தெரிவித்துள்ளது. போதிய கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் பாதிப்பு தினசரி அளவு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலும், உச்சமடையும்போது 2 லட்சம் வரையிலும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Read More

தமிழக முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உடற்பயிற்சி செய்வார். அந்த சமயங்களில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சைக்கிளில் பயணம் செய்து பொதுமக்களுடன் பேசுவதைஅவர் வாடிக்கையாக கொண்டிருப்பார். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவர் பயணம் செய்த இடங்களில் வழிநெடுக காவல் துறையினர் பின்தொடர்ந்து வந்து பாதுகாப்பு அளித்தனர். அதே சமயம் சைக்கிள் பயணம் செய்யும் போதுன் அங்கு உள்ள பொதுமக்களிடம் நலம் விசாரித்தார் இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்த ஸ்டாலின், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.

Read More

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், காமெடி நடிகர் யோகி பாபு சந்தித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் காயம் காரணமாக உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப்,தொடரில் இடம்பெறவில்லை. ஆனால்,டி20 உலகக் கோப்பை தொடரில், அவர் இடம்பெறுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடராஜன், காமெடி நடிகர் யோகி பாபு சந்தித்துள்ளனர் இந்த சந்திப்பின்போது, எடுக்கபட்ட புகைப்படங்களை தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடராஜன், அன்பான நண்பர், நடிகரை சந்திப்பதில் உற்சாகமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.மேலும், இந்த சந்திப்பின்போது, நடராஜன், முருகன் சிலையை யோகி பாபுவுக்காகபரிசாக கொடுத்துள்ளார். மேலும் இவர்கள் சந்திப்பின் போது அங்கிருந்த, டிவியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி விளையாடும் போட்டி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. இதனை பார்த்த இணைய வாசிகள் தோனி இருப்பதை சுட்டிக்காட்டி இவர்கள் சந்திப்பில், தல தோனியும் இருக்கிறார் கண்டுபிடிங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்

Read More

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளம்பெண்ணை மரத்தில் தொங்கவிட்டு குடும்பத்தினரே பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த 19 வயது இளம்பெண்,கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார் இந்நிலையில் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவர் வீட்டிலிருந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றால்திட்டுவார்களோ என்ற காரணத்தினால் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த இளம்பெண். இதனை பற்றி தகவலறிந்த பெண்ணின் குடும்பத்தார், அப்பெண்ணினை கொடூரமாகதாக்கியுள்ளனர். அதோடு இளம்பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அந்தப்பெண்ணின் தலைமுடியினை பிடித்துத் தரதரவென்று இழுந்து வந்து மரத்தில்கட்டித் தொங்கவிட்டு பொதுமக்கள் பார்க்கும்படி, பெண்ணினை குச்சியால் கொடூரமாக தாக்க ஆரம்பத்துள்ளனர். கையில் வைத்திருந்த குச்சி உடையும் வரை அடிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த இளம் பெண்ணை மரத்தில்கட்டித்தொங்கவிடப்பட்டதைக்கண்டு அனைவரும் சிரிப்பதைக் காணமுடிந்தது. ஆனால் சுற்றி நின்ற ஒருவர் கூட இளம்பெண்ணினை காப்பாற்ற முன்வரவில்லைஎன்பது தான் வேதனையான…

Read More

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹொனலுலு அருகேபறந்துகொண்டிருந்த போயிங் 747 ரக சரக்க விமானம், நடுவானில் செயலிழந்தது. நல்ல வேளையாக அது சரக்குவிமானம் என்பதால், பயணிகள் யாருமின்றி இரண்டுவிமானிகள் மட்டுமேவிமானத்தை இயக்கிச் சென்றனர். ஆகவே ஹொனலுலுவில் இருந்து மாலி தீவை நோக்கி சென்ற விமானத்தில் என்ஜின்திடீரென செயலிழந்த காரணத்தால் நடுக்கடலில் விமானத்தை இறக்க வேண்டியசூழ்நிலை வந்தது. இதனால் விமானத்தை இயக்கிய விமானிகள், அவசர நிலையைஉணர்ந்து,நடுக்கடலில் விமானத்தை இறக்கினர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமெரிக்க கடலோர படையினர், சம்பவஇடத்திற்கு சென்றுவிமானிகளை, அதிகாலை 2.30 மணியளவில் அமெரிக்க கடலோரபடையினர் மீட்டுள்ளனர்

Read More

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அங்கு அணை கட்டப்பட்டுவிட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்திருந்தார்.அதற்கு அடுத்தநாளே கர்நாடகாவுக்கு மேகதாது அணை மிக முக்கியம் எனவும், மத்திய அரசிடம் அனுமதி பெற்று அணையை கட்டுவோம் எனவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து, காவிரி ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மேகதாது அணை கட்டும்…

Read More

வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம நபரால் ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கூடுதலாக பிரபலமடைந்தார். இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து, ஆதாரங்களையும் வழங்கினார். இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

Read More