Author: Admin

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொன்ன கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது.வரி என்பது நன்கொடையல்ல. அது நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். நீதிபதியின் இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள சூழலில் விஜய்க்கு கார்த்தி சிதம்பரம் எம்பி., முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் வரி ஏய்ப்பு செய்வதற்கும், வரியை திட்டமிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.…

Read More

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவை பொறுத்தவரை அவ்வப்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுவது வழக்கம். ஏற்கனவே சச்சின், தோனி, மித்தாலி ராஜ், முகமது அசாருதீன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் வரலாறு படமாக வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் செல்லமாக தாதா என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை இந்தியில் படமாக உருவாக உள்ளது. கங்குலியின் இளமை வாழ்க்கை முதல் அவர் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக மாறி, கேப்டன் பின்னர் இந்திய கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் இந்தப் பயோபிக்கில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இதில் கங்குலியாக பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கலாம் என்றும், விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத் தீ பற்றி எரியும் நிலையில்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள அரிசோனா மாகாணத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக காடுகளில் தீப்பற்றியது. தீ வேகமாக பரவி வரும் நிலையில் விபத்து நடந்த பகுதியை ஆய்வு சென்ற சிறிய விமானம் தீயில் விழுந்து நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த இரு விமானிகளும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே அரிசோனோ – உட்டா இடையேயான சாலை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

புதுச்சேரி அரசு மதுபானங்களுக்கு 20% கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டுள்ளது மது பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவையில் கடந்தாண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் 2 மாதங்களுக்குப் பிறகு மே 24 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது தமிழகத்துக்கு இணையாக மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரி கடந்த ஏப்ரல் மாதம் வரை அமலில் இருந்தது. அதன்பின் சட்டமன்ற தேர்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து திடீரென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி விதிப்பு இன்று முதல் (ஜூலை 15 ஆம் தேதி ) அமலுக்கு வருகிறது. இதனால் ரூ.100க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் இனி 20% சிறப்பு வரி சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும் என்பது…

Read More

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளித்துள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ்வுக்கு சொந்தமான நிறுவனம் பதஞ்சலி நிறுவனம் மூலிகை பொருட்கள், சோப்பு, பேஸ்ட், நூடுல்ஸ் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக கொரோனில் என்ற மருந்தை கண்டுபிடித்தாக விளம்பரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வரி விலக்கு தர வேண்டும் என்று அந்நிறுவனம் சார்பில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கான ஆராய்ச்சி சங்கம் என்ற விதிகளின் படி அந்நிறுவனத்துக்கு வழங்கப்டும் நன்கொடைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அமித்ஷா எனும் பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் சின்ன சங்கி அண்ணாமலை என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவின் மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு திருப்பூரில் அவருக்கு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல், “அமித்ஷா என்ற பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்தி தான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை. பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழக மக்களை திராவிட கும்பலிருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும் திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்” எனக் கூறினார். ஏற்கனவே பாஜகவினரை மற்ற கட்சியினர் சங்கி என அழைத்தது போய் சொந்த கட்சியினரே தங்களை சங்கி என அழைத்துக் கொள்வது…

Read More

பாகிஸ்தானில் பொறியாளர்கள் சென்ற பேருந்து குண்டு வெடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் அணை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியானது ஆப்கன் எல்லையில் உள்ள சர்வதேச கத்வார் துறைமுகத்தை இணைக்கக் கூடியது. இந்த அணை கட்டுமான பணியில் ஈடுபட்ட சீனாவின் 30 பொறியாளர்களுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சக்தி வாய்ந்த குண்டு பேருந்தில் வெடித்தது. இதில் சீனாவின் 9 பொறியாளர்கள் உட்பட 13 பேர் பலியாகினர். இதில் பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினர் 2 பேரும் அடங்குவர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது வருகிறது.

Read More

படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கரீனா கபூர் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது இதனை ஆமீர்கானின் சொந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் லடாக்கில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு விளக்கமளித்துள்ள நடிகர் ஆமீர் கான், படப்பிடிப்பு தளங்களில் முற்றிலும் தூய்மையான மற்றும் கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் குப்பைகள் கொட்டப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என தெரிவித்துள்ளார்.

Read More

இந்தியாவின் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ இன்று முதல் பங்கு சந்தையில் கால் பதிக்க உள்ளது. பங்குச் சந்தை நிலவரத்தின் அடிப்படையிலேயே உலகளாவிய வர்த்தகம் நடைபெறுகிறது. பங்குச் சந்தை ஒழுங்கு ஆணையமான செபி ஒப்புதல் அளித்ததையடுத்து பங்குச் சந்தையில் ஜொமோட்டோ நிறுவனம் இன்று முதல் கால் பதிக்க உள்ளது. அதன்படி ஜொமோட்டோ நிறுவனத்தின் 9 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள பங்குகள் இன்று விற்பனைக்கு வருகிறது. பங்குச் சந்தைக்கு வரும் முதல் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமும் ஜொமோட்டோதான். சமீபத்தில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பெயர் ஜொமோட்டோ லிமிட்டெட் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆய்வறிக்கை சமர்ப்பித்தது. நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருன்கிறன. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. இதனையடுத்து, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. சுமார் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர். இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை சமர்பித்தனர்.

Read More