பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

SHARE

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளித்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ்வுக்கு சொந்தமான நிறுவனம் பதஞ்சலி நிறுவனம் மூலிகை பொருட்கள், சோப்பு, பேஸ்ட், நூடுல்ஸ் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக கொரோனில் என்ற மருந்தை கண்டுபிடித்தாக விளம்பரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படியான நிலையில் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வரி விலக்கு தர வேண்டும் என்று அந்நிறுவனம் சார்பில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு அறிவியல் ஆராய்ச்சிக்கான ஆராய்ச்சி சங்கம் என்ற விதிகளின் படி அந்நிறுவனத்துக்கு வழங்கப்டும் நன்கொடைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம்..

Admin

இந்தியாவில் 68% அளவுக்கு சரிந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்!!

Admin

குழந்தைகள் முகக்கவசம் அணியலாமா? ரெம்டெசிவர் பாதுகாப்பானதா? விளக்கம் கொடுத்த மத்திய அரசு

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

நீக்கப்படும் எடியூரப்பா… போர்க்கொடி தூக்கும் லிங்காயத்து மடாதிபதிகள்

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

Admin

பணிந்தது பேஸ்புக் – இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்தது!

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

Leave a Comment