- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்ததன் மூலமாக சிலிண்டர் ரூ.900ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையை பொறுத்து சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுவது வழக்கமானது. அந்த வகையில் தற்போது சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்துள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.900.50க்கு விற்பனையாகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1831.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 17 ஆம் தேதி . சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 875.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.1,756க்கு விற்பனையானது. இந்த நிலையில் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்த வருடத்தில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.285 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய இப்ராஹிம் தமிழகத்தில் மக்கள் ஆதரவோடு வளர்ந்து வரக்கூடிய பாஜகவின் வளர்ச்சியை தடுக்க திமுக சூழ்ச்சி செய்வதாக கூறினார். மேலும், பாஜகவைச் சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலியாக செயல்பட்ட அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. அதை விரைவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடுவோம்’’ என்று அவர் தெரிவித்தார். ’’மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் உறுப்பினராக மட்டுமே இணைந்தார். திமுகவின் தோல்வியை மறைக்க மதன் ரவிச்சந்திரனை கைக்கூலியாக மாற்றி இந்த இழிவான செயல்களை செய்திருக்கிறார்கள். திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்ட வீடியோக்கள் எல்லாம் வெளிவந்தன. ஆனால் அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்பது போல் அப்போது திமுக அதிமுக காட்டிக்கொண்டதாக கூறும் வேலூர் இப்ராஹிம். மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில் உள்ள சம்பந்தப்பட்ட பெண் கே. டி. ராகவனை மூளைச்சலவை செய்துள்ளதாகவும் ஒரு பெண்…
ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சியின் தாலிபான்கள் போன்றவர்கள் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேசியுள்ளார். கல்புர்கி மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கு சென்ற பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியிடம் கல்புர்கியில் ஓவைசி கட்சியின் செயல்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “ஓவைசி கட்சி, கர்நாடகாவின் தாலிபான்கள் போன்றவர்கள் என கூறியுள்ளார். அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லிமின் கட்சியை, சி.டி.ரவி, தாலிபான்களுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இந்த நிலையில் சி.டி.ரவியின் கருத்து குறித்து ஓவைசி கூறுகையில் : சி.டி.ரவி ஒரு குழந்தை, அவருக்கு சர்வதேச அரசியல் தெரியாது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தாலிபான்களுக்கு பாஜக தடை விதிப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மழையில் சாக்ஸ் நனைந்து ஈரமாகிவிட்டதால் சிரமப்பட்டதாகவும் . இல்லாவிட்டால் இல்லக்கை எட்டியிருப்பேன் என்று தனது கள அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு. டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த நிலையில், யூரோ ஸ்போர்ட் நிறுவனத்துக்கு மாரியப்பன் அளித்த பேட்டியில் : இன்று விளையாட்டை ஆரம்பித்தபோதே லேசாக மழை தூரல் இருந்தது. ஆரம்பத்தில் சிரமம் தெரியவில்லை. ஆனால், 1.80 மீட்டர் உயரத்தைக் கடந்து தாண்டும் போது மழை அதிகமானது. மழைநீரில் நனைந்து எனது சாக்ஸ் ஈரமானது. அப்போது நான் உண்மையான சவாலை சந்தித்தேன். எனக்கு டேக் ஆஃபில் பிரச்சினை உண்டானது, இல்லையென்றால் நிச்சயமாக 1.90 மீட்டரைக் கடந்திருப்பேன்என கூறியுள்ளார். இந்தியாவின் தங்கவேலுவும், அமெரிக்காவின் சாம் கிரீவும் . 3-வதுமுயற்சியில் இருவரும் தோல்வி அடைந்தால், தங்கப்பதக்கம் பிரித்து வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க வீரர்…
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதே போட்டியில் பீகாரைச் சேர்ந்த சரத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றார். இந்த ஆண்டுக்கான பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன. வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்!” என…
பொதுத்துறை நிறுவனங்கள் விவகாரத்தில் பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார். சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜவஹர் மற்றும் அவரதுஆதரவாளர்கள் உட்பட 500 பேர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி நாட்டிற்கு லாபம் தரக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பனை செய்வதை கடுமையாக கண்டிப்பதாக கூறினார். மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு செல்வதால் , இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகும். என கூறிய அழகிரி , பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை மோடி அறுப்பதாக கூறினார். அதே போல் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினால், கேள்விக்கான பதிலை வழங்காமல்,…
அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: திமுக அரசு ஜெயலலிதாவின் பெயரை அழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் திமுக தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்வு ரத்து என கூறி நீட்டுக்கு வேட்டு வைத்தனர். மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதாகவும் வாய்க்கு வந்த படி பல திட்டங்களை கூறி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் அதில் ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை என கூறினார். மேலும், திமுக தலைவராக கலைஞர் இருந்தபோதே அதுமுகவை அழிக்க தோப்புக்கரணம் போட்டு, பல வித்தைகளை காட்டினார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. அவரது தந்தையாலேயே முடியவில்லை. அவரது மகன் மு.க.ஸ்டாலினால் முடியுமா? இதற்கெல்லாம் அதிமுகவினர் பயந்தவர்கள் அல்ல. கடத்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதா?, திமுக ஆட்சிக்கு வந்ததும், கல்வெட்டுக்கள் அடித்து நொறுக்கப்படுகிறது, ஜெயலலிதா…
கர்நாடகாவில் கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கோரமங்களா பகுதியில் உள்ள சகோதரர் மற்றும் உறவினர் வீட்டிற்கு ஓசூர் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் தனது நண்பர்களுடன் காரில் சென்றார். அந்த கார் கோரமங்களாவில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் உள்ள தடுப்பு கம்பிகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷின் மகன் கருணாசாகர் உயிரிழந்ததற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு, தெலங்கானா மாநிலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தெலங்கானாவின் பள்ளி,கல்லூரி திறப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில அரசின் அறிவிப்பிற்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் திறப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பல்துறை நிபுணர்களோடு ஆலோசித்த பிறகும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்ததாகவும், மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக நண்பர்களுக்கு சிறப்பு பார்ட்டி கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சமூகவலைத்தளங்கள் மூலமாகவும், நேரிலும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ட்விட்டரிலும் HBDYuvanShankarRaja என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகியுள்ளது. இந்நிலையில் பிறந்தநாளையொட்டி யுவன் சங்கர் ராஜா தனது திரையுலக நண்பர்களுக்காக சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷும், சிம்புவும் பாடல் பாடி அசத்தினர். தனுஷ் ‘மாரி 2’ படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடலையும், சிம்பு ‘வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற லூசுப் பெண்ணே பாடலையும் பாடி ரசிகர்களுக்கு…
