சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்ததன் மூலமாக சிலிண்டர் ரூ.900ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையை பொறுத்து சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுவது வழக்கமானது.
அந்த வகையில் தற்போது சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்துள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.900.50க்கு விற்பனையாகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1831.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த 17 ஆம் தேதி . சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்து 875.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.1,756க்கு விற்பனையானது.
இந்த நிலையில் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த வருடத்தில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.285 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.