மழையில் சாக்ஸ் நனைந்து ஈரமாகிவிட்டதால் சிரமப்பட்டதாகவும் . இல்லாவிட்டால் இல்லக்கை எட்டியிருப்பேன் என்று தனது கள அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு.
டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், யூரோ ஸ்போர்ட் நிறுவனத்துக்கு மாரியப்பன் அளித்த பேட்டியில் :
இன்று விளையாட்டை ஆரம்பித்தபோதே லேசாக மழை தூரல் இருந்தது. ஆரம்பத்தில் சிரமம் தெரியவில்லை. ஆனால், 1.80 மீட்டர் உயரத்தைக் கடந்து தாண்டும் போது மழை அதிகமானது.
மழைநீரில் நனைந்து எனது சாக்ஸ் ஈரமானது. அப்போது நான் உண்மையான சவாலை சந்தித்தேன். எனக்கு டேக் ஆஃபில் பிரச்சினை உண்டானது, இல்லையென்றால் நிச்சயமாக 1.90 மீட்டரைக் கடந்திருப்பேன்என கூறியுள்ளார்.
இந்தியாவின் தங்கவேலுவும், அமெரிக்காவின் சாம் கிரீவும் . 3-வதுமுயற்சியில் இருவரும் தோல்வி அடைந்தால், தங்கப்பதக்கம் பிரித்து வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க வீரர் சாம் 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றதால், தங்கவேலு தாண்ட முடியாததால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.