முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி , சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்.
வடசென்னை பகுதியை மேம்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தர விட்டிருந்தார். அதன் படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், காசிமேடு முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரையுள்ள கடற்பகுதியை அழகுபடுத்த முடிவு செய்து பல்வேறு பிரிவுகளாக பணிகள் ஒதுக்கப்பட்டது. அதன்படி ₹5.5 கோடி செலவில் சுங்கச்சாவடியில் இருந்து 800 மீட்டர் தூரத்திற்கு எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் 3 மீட்டரில் நடைபாதையும், அரை மீட்டரில் சாலையோர பூங்காவும் நடைபெற உள்ளது. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் இன்று நடைபெற்றது.
இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மற்றும் திமுகவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.