- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பயண வழித்தடத்தை ஏற்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியானதகவலில் ஜி 7 மாநாட்டிற்காக பிரிட்டன் வந்துள்ள அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கும் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கும் இடையே வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பயண வழத்தடத்தை ஏற்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா். இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்று எதிா்பாா்க்க முடியாது. ஆனால் , பிரிட்டன் அமெரிக்கா வழித்தட திட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து அதிபா் பைடன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுடன் ஆலோசித்து மட்டுமே உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூவேந்தன்
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை பணிகளுக்கும், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமல் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set)…
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்த தமிழக அரசு கடந்த வாரம் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய 27 மாவட்டங்களுக்கும் சில தளர்வுகளை அளித்திருந்தது. இது ஜூன் 14 ஆம் தேதி மாலை 4 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 21ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு சமயத்தில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதலாக சில தளர்வு களும், இதுவரை தளர்வுகள் அளிக்கப்படாத 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளையும் தமிழக அரசு வழங்கியுள்ளது.
நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேரடி ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது காதலர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள படம் நெற்றிக்கண். இதில் கண்பார்வையற்ற தொடர் கொலையாளி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். ’அவள்’ திரைப்படத்தின் இயக்குனரான மிலிந் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்துள்ள இப்படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இப்படம் ஜூலை மாதம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான “பிளைண்ட்”டின் ரீமேக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகனை விடுதலை செய்யக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது மகன் 30 ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறான். அவனுக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளதால், மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படுகிறது, சிறையில் அது சரிவர கிடைப்பதில்லை – என்று தாயார் அற்புதம்மாள் வேதனை தெரிவித்தார். மேலும், தனது மகன் பேரறிவாளன் குற்றவாளி இல்லை என கூறிய ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜன், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஆகையால் தனது மகனை விடுதலை செய்ய முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கிறேன் எனக் கூறினார். இந்நிலையில் தாயார் அற்புதம்மாள் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “இந்த தாயின் 31 ஆண்டு கால போராட்டத்திற்கு நீதி வழங்கப்படுவதற்கான அதிக நேரம் இது” என…
ஓட்டுநர் உரிமம் எடுக்க இனிமேல் ஆர்.டி.ஓ அலுவலகம் செல்ல தேவையில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டும் என்றால், ஏதேனும் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்த பின்பு மாவட்ட ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு வாகனத்தை குறிப்பிட்ட விதிமுறைகள் படி இயக்கி காட்ட வேண்டும். சரியான விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை முறையாக இயக்கினால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். ஆனால் ஜூலை 1ம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருவதாக மத்திய சாலை போகுவரத்துதுறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், உரிய அங்கீகாரம் பெற்ற மத்திய அரசின் பயிற்சி மையங்களில் பயிற்சிக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க “simulator” எனப்படும் மாதிரி வாகனங்கள் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் நன்கு கற்றறிந்த பின்பு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது பயிற்சி பெற்ற நபர் ஆர்.டி.ஓ…
மம்தா பானர்ஜியை சோசியலிசம் திருமணம் செய்துகொள்வதாக உலா வரும் திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. சேலத்தை சேர்ந்த மம்தா பேனர்ஜி என்ற பெண்ணுக்கும் சோசியலிசம் என்பவருக்கும் ஜூன்13ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அண்மையில் திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் வெளியானது. இது தொடர்பாக மணமகனின் தந்தையான மோகன் என்பவரை தொடர்பு கொண்டு, சோசியலிசம் என்று பெயரிட்டதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். அதற்கு விளக்கம் அளித்த தந்தை, தங்களது பரம்பரை கம்யூனிசத்தின் மீது தீராத பற்றுடையவர்கள் என்று கூறியுள்ளார். கம்யூனிசம் மீதான பற்றின் காரணமாகவே தனது மகன்களுக்கு லெலினிசம், சோசியலிசம் என பெயர் வைத்ததாகவும் அவர் கூறினார்.மேலும் தான் வசிக்கும் பகுதியில் பலருக்கு ரஷ்யா, மாஸ்கோ, செக்கோசிலேவேக்கியா, ரொமேனியா உள்ளிட்ட பெயர்களும் இருப்பதாக கூறினார். மூவேந்தன்
திருமணமான பெண்ணை நபர் ஒருவர், ஓடும் ரயிலில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகாரின் சுல்த்கஞ்சில் உள்ள பீர் குர்த் கிராமத்தில் வசிபவர்கள் ஆஷ்குமார் மற்றும் அனு குமாரி. இவர்கள் இருவரும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு குடும்பத்தார் வலுகட்டாயமாக திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இருப்பினும், அவர் பல ஆண்டுகளாக ஆஷ்குமாரை காதலித்து வந்ததால், நடந்து முடிந்த திருமணத்தின் மீது நாட்டம் கொள்ளாது இருந்துள்ளார். இந்த நிலையில் ஓடும் ரயிலில் ஆஷ்குமார் தனது காதலியும் வேறு ஒருவரின் மனைவியுமான அனு குமாரியை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். இந்தாண்டு பொங்கலின்போது ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு ஈஸ்வரன் படத்தின் மூலம் தரமான ரீஎன்ட்ரி கொடுத்தார். இதனால் ஈஸ்வரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் நாளை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை அடுத்து பத்து தல என்ற படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.- மூவேந்தன்
ஊரடங்கு விதிகளை மீறி, வெளியே வந்து காவல்துறையினரோடு ரகளை செய்த பெண் வழக்கறிஞரின் ஜாமீன் மனுக்களை, சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு விதிகளை மீறிய வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகள் இருவரும் சென்னை சேத்துபட்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை தகாத வகையில் பேசி வாக்குவாதம் செய்தத காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மற்றும் அவருடைய மகள் பிரீத்தி மீது, ’பணி செய்யவிடாமல் தடுத்தல்’, ‘கொலை மிரட்டல் விடுத்தல்’ உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார்வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பினர். இந்த நிலையில் நேற்று இவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ’வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே இதுபோன்ற…
