- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கர் போட்டியிட்டார். அதில் 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் சி. விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாக செலவு செய்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்தும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கரின் வெற்றி பெற்றது செல்லாது எனவும் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் புகாரில் சிக்கி சர்ச்சையான சிவசங்கர் பாபா கைதாக இருந்த நிலையில் உத்தராகண்ட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு வழக்கானது சி.பி.சி.ஐ.டி வசம் சென்றது இந்த நிலையில்உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று டேராடூன் விரைந்தனர். ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க சிபிசிஐடி போலீசார் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆகவே சிவசங்கர்…
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நீட் தேர்வு ரத்து, மாநில அரசுகளே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துவது, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாளை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.சந்திக்க உள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை தமிழ்நாடு சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், திமுக மக்களவைக் குழுத் தலைவர் டிஆர்பாலு, திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் வரவேற்க திட்டமிட்டுள்ள நிலையில், சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை மரியாதை அளிக்கப்பட உள்ளது. அந்த இல்லத்தில் முதல்வர்கள் தங்குவதற்கான தனிச்சிறப்பு அறையில் மு.க.ஸ்டாலின் தங்கவுள்ளார். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அறையை தான் மு.க.ஸ்டாலின் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது கடைசியாக டெல்லி சென்ற சமயத்தில் பயன்படுத்திய கார் இன்னும் டெல்லியில் உள்ள…
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தன் முன் இருந்த கொகோ கோலா பாட்டிலை ஓரத்தில் வைத்த ரொனால்டோவின் செயலால் அந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. யூரோ சாம்பியன் 2021 கால்பந்து தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் முன் இருந்த கொகோ கோலா பாட்டிலை பாட்டிலை ஓரத்தில் வைத்து விட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு கோலாவிற்குப் பதில் தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தினார். அந்தக் காணொளியும், புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும் இந்த சம்பவத்தின் எதிரொலியாக கொகோ கோலா நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,377 கோடி அளவிற்குநஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் ஜூன் 21 ஆம் தேதி முதல் நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழக அரசு கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பொது போக்குவரத்திற்கு தற்போது வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும், தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும் ஊரடங்கும் ஜூன் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூன் 21ம் தேதிக்கு பின் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில்…
புதுச்சேரி சட்டப்பேரவயின் சபாநாயகராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜகவை சேர்ந்த செல்வம் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெற இருந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.சபாநாயகர் தேர்தலில் போட்டியிட செல்வம் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நாளை காலை கூட உள்ள சட்டசபை கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் முறைப்படி அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்முன் வைக்கப்பட்ட கோகோ கோலா பாட்டிலை கால்பந்து வீரர் ரொனால்டோ அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ‘யூரோ கோப்பை’ கால்பந்து தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் போர்சுக்கல் மற்றும் ஹங்கேரி அணிகள் மோதுகின்றன. முன்னதாக இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போர்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் அவரது பயிற்சியாளர் பெர்னான்டோ ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுக்காக மேடையில் தனித்தனியே இரு கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, தனக்கான இருக்கையில் அமர்ந்த ரொனால்டோ, கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு, அதற்கு பதில் தண்ணீர் பாட்டிலை வைத்து அனைவரும் தண்ணீரை பருகும்படி அறிவுறுத்தினார். அவரது செய்கை பலரையும் கவர்ந்துள்ளது. முன்னதாக கோகோ கோலா, பேன்டா உள்ளிட்ட பானங்கள் அருந்துவது உடல்நலத்திற்கு கேடு என தனது மகனுக்கு அறிவுரை வழங்கி அலுத்துவிட்டதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறை தேவைப்படாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா முதல் அலைக்கு பின், உருமாறிய கொரோனாவால் இங்கிலாந்தில் பலர் பாதிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து அங்கு உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பிற நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டன. பல மாதங்களாக நீடித்த ஊரடங்கு காரணமாக அங்கு பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஜூலை 21ம் தேதி முதல் ஊரடங்கிலிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்படும் என ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்தார். கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்தநிலையில், ஜூலை 19ம் தேதிக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்றும், எனவே இதற்கு மேல் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பிரதமர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பாலியல் சர்ச்சை வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா வெளிநாடு செல்லாதவாறு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்ப சிபிசிஐடி முடிவுசெய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் புகார் வழக்கில் சிக்கினார். இந்த நிலையில் சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அதே சமயம் சிவசங்கர் பாபா வழக்கினை எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி தனிப்படை குழுவினர் விரைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. டேராடூன் செல்லும் தனிப்படை அங்கு அவரை விசாரணை செய்துபின்னர் கைது செய்யலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு…
உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்தார். உலகம் முழுவதும் ஜூன் 14 அன்று இரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது . ABO ரத்த குரூப் முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 14 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இரத்ததான தினத்தை அடுத்து கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ரத்ததானம் செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரத்த தான தினத்தையொட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்தார். ரத்ததானம் செய்த அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
