கோகோ கோலா வேண்டாம்… தண்ணீர் பாட்டில் போதும்… ரொனால்டோவின் வைரல் வீடியோ

SHARE

தன்முன் வைக்கப்பட்ட கோகோ கோலா பாட்டிலை கால்பந்து வீரர் ரொனால்டோ அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ‘யூரோ கோப்பை’ கால்பந்து தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் போர்சுக்கல் மற்றும் ஹங்கேரி அணிகள் மோதுகின்றன.

முன்னதாக இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போர்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் அவரது பயிற்சியாளர் பெர்னான்டோ ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுக்காக மேடையில் தனித்தனியே இரு கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, தனக்கான இருக்கையில் அமர்ந்த ரொனால்டோ, கோகோ கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு, அதற்கு பதில் தண்ணீர் பாட்டிலை வைத்து அனைவரும் தண்ணீரை பருகும்படி அறிவுறுத்தினார். அவரது செய்கை பலரையும் கவர்ந்துள்ளது.

முன்னதாக கோகோ கோலா, பேன்டா உள்ளிட்ட பானங்கள் அருந்துவது உடல்நலத்திற்கு கேடு என தனது மகனுக்கு அறிவுரை வழங்கி அலுத்துவிட்டதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள் 12: ‘எல்லாம் நாடகம்!’

இரா.மன்னர் மன்னன்

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

மயங்கி விழுந்த நட்சத்திர வீரர்..நிறுத்தப்பட்ட யூரோகால்பந்து போட்டி!

Admin

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

“தல-தளபதி” சந்திப்பு – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Admin

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியா…ரூ. 4 கோடி பரிசு அறிவித்த ஹரியானா அரசு

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

Leave a Comment