சி. விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

SHARE

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கர் போட்டியிட்டார்.

அதில் 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் சி. விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாக செலவு செய்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்தும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் விராலிமலை தொகுதியில் சி. விஜயபாஸ்கரின் வெற்றி பெற்றது செல்லாது எனவும் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?, கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்?- ஈபிஎஸ் பேட்டி

Admin

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

தமிழகத்தில் உள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

Admin

உதயநிதி ஸ்டாலினுடன் இறகுப் பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!

Admin

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

சிகரெட் கொடுக்க தாமதம்…கடையை அடித்து நொறுக்கிய திமுகவினரை வெளுத்த பொதுமக்கள்…

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

Leave a Comment