Author: Admin

சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியை தீபா, முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளிக்கபட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிகளை மூளைச் சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்ற ஆசிரியைகள் பாரதி, தீபா ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் பக்தை சுஷ்மிதா கைதான நிலையில், ஆசிரியை தீபா தலைமறைவானதாக கூறப்படுகிறது. மற்றொரு ஆசிரியை பாரதி, வெளிநாட்டில் உள்ளார். இந்நிலையில், தமக்கு முன் ஜாமீன் வழங்க கோரி, சென்னை உயர்…

Read More

பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்ற ஆசிரியை 3 மாத கைக்குழந்தையோடு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக, ஆசிரியை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். இதே பள்ளியில் பயின்று தற்போது ஆசிரியையாக பணியாற்றி வரும் சுஷ்மிதா, பள்ளி மாணவிகளை சிவசங்கர் பாபாவிற்கு விருந்தாக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக எளிய குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளை குறிவைத்து, அவர்களை சிவசங்கர் பாபாவிடம் அழைத்து சென்றுள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிரியை சுஷ்மிதாவை, செங்கல்பட்டு கூடுதல் அமர்வு மகிளா நீதிபதி சங்கீதா இல்லத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுஷ்மிதாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கினார். இதனால் அவர்…

Read More

யூடியூப் சேனல் மூலமாகஆபாசமாக பேசிய மதன் போலீசாரல் நேற்று கைது செய்யப்பட்டர்.அப்போது செய்தியாளர்கள் மதனை புகைப்படம் எடுத்த போது நான் என்ன பிரதமரா? என கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களிடம் ஆபாசமாக பேசி பணமோசடியில் ஈடுபட்ட யூ-டியூபர் மதன் மீது புகார் எழுந்ததால் போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த மதன் தருமபுரியில் அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்ததார். இதனை கண்டறிந்த தனிப்படை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். யூ-டியூபர் மதனிடமிருந்து 2 சொகுசு கார்கள், 3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர். இதனைத் தொடர்ந்து, மதனை தருமபுரியில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர். அப்போது,செய்தியாளர்கள் மதனை புகைப்படம் எடுத்தபோது,நான் என்ன பிரதமரா?”,என்று மதன் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த…

Read More

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கடந்த மாதம் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை சீராக இருந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மில்காசிங் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இந்த நிலையில்பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில் தேசத்தின் கற்பனையை கைப்பற்றிய மற்றும் இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாங்கள் இழந்துவிட்டோம். அத்தனை தடகள வீரர்களுக்கும் மில்கா சிங்கின் வாழ்க்கை ஒரு…

Read More

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பாக இன்று மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தபட்டது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. ஆகவே,தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 11 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு நேரக்கட்டுபாடு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இன்றைய கூட்டத்தில் கொரோனா அதிகம் பாதித்திருந்த 11 மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Read More

இன்று சென்னையிலிருந்து பயணிகள் விமானம் மூலம் மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாதபோது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிபடங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்று வருவார். இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார். அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததால்அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது வெளிநாடு செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார்.

Read More

சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதனையடுத்து சிபிசிஐடி போலீசாரின் தீவிர சோதனையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், செங்கல்பட்டு சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபா மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இன்று காலை முதல் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த பெண் பக்தர்கள் சுஷ்மிதா, நீராஜ் கருணாவிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுஷ்மிதா பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர்…

Read More

நலவாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.4,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதனை ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி சுப்பையா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், தமிழகத்தில் மொத்தமுள்ள 11,449 மூன்றாம் பாலினத்தவர்களில், ரேஷன் அட்டை வைத்துள்ள 2,956 பேருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 8493 பேருக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசின்…

Read More

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் புத்தகம் இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் வைரலானது அப்படி அந்த புத்தகத்தில் என்ன உள்ளது ?காண்போம் இந்த தொகுப்பில். ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் புத்தகம் திராவிடத்தின் பல்வேறு சிறப்புகளை சொல்லும் புத்தகமாகும்.இந்த புத்தகம் 2019ம் ஆண்டு வெளியான போதே பெரும் வரவேற்பை பெற்றது. சோனியா காந்திக்கு , மு..க.ஸ்டாலின் பரிசளித்ததன் வாயிலாக மீண்டும் இந்த புத்தகம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. வரலாற்று ஆய்வாளரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் இப்போது ஒடிசா முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக இருக்கிறார். பல வருடங்கள் நீண்ட ஆய்வுக்குப்பிறகு இந்த புத்தகத்தை எழுதினார். புத்தகத்தின் முக்கிய கருத்து என்னவென்றால் இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றியும் அந்த மக்கள் தங்களின் கடைசி காலகட்டத்தில் எங்கு சென்றனர் என்பது குறித்து விவரிக்கிறது. இரண்டாவதாக சங்க கால…

Read More

ஒரு லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டும், இந்தியாவின் எதிர்கால தேவைக்காகவும் மருத்துவம் பயிலாதவர்களை மருத்துவத்துறையில் பயிற்சி அளித்து, கொரோனா முன்களப்பணியாளர்களாக ஏற்படுத்தும் நோக்கில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இதற்கென பிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ் திட்டத்தின் கீழ் 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 26 மாநிலங்களில் சுமார் 111 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 6 பிரிவுகளின் கீழ் பயிற்சியளிக்கப்படவுள்ளது. அதாவது மருத்துவ சேவை, அடிப்படை மருத்துவ சேவை, மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை, அவசர கால மருத்துவ சேவை, மாதிரி சேகரிப்புக்கு உதவுவது, மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து பயிற்சி பெற விரும்புவோருக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் இன்று காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சுமார் ஒரு லட்சம்…

Read More