1 லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்ய பிரதமரின் புதிய திட்டம்

SHARE

ஒரு லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டும், இந்தியாவின் எதிர்கால தேவைக்காகவும் மருத்துவம் பயிலாதவர்களை மருத்துவத்துறையில் பயிற்சி அளித்து, கொரோனா முன்களப்பணியாளர்களாக ஏற்படுத்தும் நோக்கில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இதற்கென பிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ் திட்டத்தின் கீழ் 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 26 மாநிலங்களில் சுமார் 111 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் 6 பிரிவுகளின் கீழ் பயிற்சியளிக்கப்படவுள்ளது. அதாவது மருத்துவ சேவை, அடிப்படை மருத்துவ சேவை, மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை, அவசர கால மருத்துவ சேவை, மாதிரி சேகரிப்புக்கு உதவுவது, மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து பயிற்சி பெற விரும்புவோருக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் இன்று காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சுமார் ஒரு லட்சம் முன்களப்பணியாளர்களை உருவாக்கும் முயற்சியில் இத்திட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த பேரிடர் காலத்தில் சுயநலமின்றி செயலாற்றி வரும் சுகாதாரத்துறையினருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் 68% அளவுக்கு சரிந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்!!

Admin

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது.. ராகுல் காந்திக்கு ஹர்ஷவர்தன் ட்வீட்

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

டெல்டா கொரோனா வேகமாக பரவ வாய்ப்பில்லை: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

Admin

பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு.. 25 நிமிடங்கள் பேசியது என்ன?

Admin

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

Leave a Comment