இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

SHARE

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கடந்த மாதம் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை சீராக இருந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மில்காசிங் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இந்த நிலையில்பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில் தேசத்தின் கற்பனையை கைப்பற்றிய மற்றும் இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாங்கள் இழந்துவிட்டோம்.

அத்தனை தடகள வீரர்களுக்கும் மில்கா சிங்கின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாகவும், உத்வேகம் அளிக்க கூடியதாகவும் இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் என்னுடைய இரங்கல்கள்என தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

இந்திய கிரிக்கெட் வீரரை 2வது முறையாக விவாகரத்து செய்த மனைவி…!!

Admin

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

ஆந்திராவில் மே 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

Admin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

Leave a Comment