- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
சமூக ஊடகங்களில் வெளியாகும் உணர்ச்சிகரமான கருத்துகளை பார்த்து, வழக்குகளின் தீர்ப்பை முடிவு செய்துவிடக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார். நீதிபதிகள் மத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் காணொலி முறையில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா சமூக ஊடகங்களில் உணர்ச்சிகரமான ஒரே கருத்தை பலர் பதிவிட்டிருந்தால் அது சரியாக இருக்கும் என்று உறுதிபடக் கூறிவிட முடியாது. பொதுமக்கள் கருத்துக்கள் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானாலும் எது சரி எது தவறு என்பதை பிரித்தறியும் தன்மை சமூக ஊடகங்களுக்கு கிடையாது. ஆகவே சமூக ஊடகங்களில் வெளியாகும் உணர்ச்சிகரமான கருத்துகளை பார்த்து, வழக்குகளின் தீர்ப்பை முடிவு செய்துவிடக் கூடாது என ரமணா கூறியுள்ளார்
மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் அனைவரும், ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைத்து வருகின்றனர். இதற்கு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என கூறுவதை சமூக குற்றம் என நினைக்க வேண்டாம், இந்தியா மாநிலங்களை கொண்ட ஒன்றியம் என்றே அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கி இருப்பதால் தான் அதை பயன்படுத்துவதாகவும், இனியும் அதை தான் பயன்படுத்துவோம் என்று முதல்வர்…
’பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளதை தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் – இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டது பின்னர் விஜயின் பிறந்த நாளன்று படத்தின் பெயர் ‘பீஸ்ட்’என அறிவித்த படக்குழு, நடிகர் விஜயின் மாஸான 2 போஸ்டர்களையும் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியது. தற்போது தமிழகத்தில் 100 பேருக்கு மிகாமல் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை வந்த பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும்பாலான சேவைக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டாலும், பிற மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கான தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா? கூடுதல் தளர்வுகள் வழங்கலாமா? என்பது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் அந்த ஆலோசனையில், காதாரத்துறை மற்றும் பிற துறை உயர்…
தனக்கு தமிழகமே தாய்வீடு என ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 29வது டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜே.கே.திரிபாதி நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு துறை சார்பில் சிறப்பான முறையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதனையடுத்து 30வது டி.ஜி.பியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபுவை பதவியில் அமர்த்தி காவல் துறையிலிருந்து ஜே.கே திரிபாதி பிரியா விடை பெற்றார். மேலும் வடம் கட்டப்பட்ட காரில் அவரையும் அவரது மனைவியையும் அமர்த்தி காவல்துறை உயர் அதிகாரிகள் அதனை இழுத்துச் சென்று வாயில் வரை கொண்டு சென்று நன்றி தெரிவித்தனர் .சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஜே.கே திரிபாதி, காவல்துறை பணியை 36 ஆண்டுகாலம் சிறப்பாக ஆற்றி இன்று ஓய்வு பெறுகிறேன் என்றும், எனக்கு காவல் பணியில் இந்த பெருமையை வழங்கிய தமிழக அரசுக்கும், உடன் பணியாற்றிய அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் எனது…
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 1லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது இந்நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இன்று சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, முன்பு 825 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், தற்போது 850 ரூபாய் 50 காசுகளாக விலை உயர்ந்துள்ளது. இதைப்போல வணிக ரீதியான எரிவாயு சிலிண்டரின் விலையும் 84 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஆயிரத்து 687 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயுவின் இந்த புதிய விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டதைப்…
இந்தியாவில் டுவிட்டர் தளம் சிறிது நேரம் முடங்கிய நிலையில், பின்பு மீண்டும் செயல்படத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்க கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட நிலையில் டுவிட்டர் மட்டும் மறுத்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்கும், டுவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே நாளுக்குநாள் மோதல் அதிகரித்து வருகிறது. புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பல முறை அவகாசம் வழங்கியும், அதனை ஏற்காததால் அந்நிறுவனத்திற்கான சட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது மத்திய அரசு. இந்நிலையில் இந்தியாவில் டுவிட்டர் தளமானது இன்று காலை சிறிது நேரம் முடங்கிய நிலையில் பின் மீண்டும் செயல்பட தொடங்கியது. இது மத்திய அரசின் நடவடிக்கையா அல்லது டிவிட்டர் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறா என்பது தெரியவில்லை. இதுகுறித்து டுவிட்டர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியதாகவும், சரி செய்யப்பட்டு விட்டதாகவும், பயனாளர்கள்…
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை பதிவு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4000 இரு தவணைகளில் ரூ.2000 வீதம் மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. மேலும் ஜூன் மாதத்தில் 14 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.இதனைப் பெற பொதுமக்கள் நியாயவிலை கடைகளுக்கு வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது. அதேபோல் புதிய மின்னணு குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்த மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோரவேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல்…
தமிழக காவல்துறையின் 30ஆவது சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவி ஏற்றார். சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபி சைலேந்திரபாபு பதவியேற்றுக்கொண்டார். புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் திரிபாதி. தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த திரிபாதியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இந்த அரிய வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி கூறிய அவர், சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியைத் திணிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அமைச்சம் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளிடம் ஆங்கிலத்தில் எழுப்பப்படும் வினாவுக்கு இந்தியில் பதில் அளிக்கும் வழக்கம் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் இந்தி தெரியாத, படிக்காத மக்கள் ஆங்கிலத்தில் எழுப்பும் வினாக்களுக்கு இந்தியில் பதில் தரப்படும் போது அதை படித்து அறிந்து கொள்ள முடிவதில்லை என்றும், இதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் மொழிகளில் வினா எழுப்பப்படுவதும், விடை அளிக்கப்படுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் உன்னதமானது. அதை இந்தித் திணிப்புக்கான கருவியாக பயன்படுத்தக்கூடாது. தகவல் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்படும் வினாக்களுக்கு அதே மொழியில் விடை தரும்படி அதிகாரிகளுக்கு அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
