தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியை திணிக்கக்கூடாது.!! ராமதாஸ் ட்வீட்

SHARE

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியைத் திணிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

மத்திய அமைச்சம் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளிடம் ஆங்கிலத்தில் எழுப்பப்படும் வினாவுக்கு இந்தியில் பதில் அளிக்கும் வழக்கம் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தி தெரியாத, படிக்காத மக்கள் ஆங்கிலத்தில் எழுப்பும் வினாக்களுக்கு இந்தியில் பதில் தரப்படும் போது அதை படித்து அறிந்து கொள்ள முடிவதில்லை என்றும், இதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளூர் மொழிகளில் வினா எழுப்பப்படுவதும், விடை அளிக்கப்படுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் உன்னதமானது. அதை இந்தித் திணிப்புக்கான கருவியாக பயன்படுத்தக்கூடாது.

தகவல் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்படும் வினாக்களுக்கு அதே மொழியில் விடை தரும்படி அதிகாரிகளுக்கு அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

அக்னி பரீட்சையாகவே ஆட்சிக்காலம் முழுவதும் அமைந்து விட்டது- எடியூரப்பா கண்ணீர்

Admin

World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

Admin

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை கூட்டம்..!!

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

இதெல்லாம் எனக்கு சகஜம்… எளிதாக வெற்றி பெற்ற பி.வி.சிந்து…

Admin

என் வீட்டுலதான் ரெய்டு பண்ணுவாங்கனு நினைச்சேன் – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

Admin

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

தடுப்பூசி இல்லை… மத்தபடி கொரோனா எங்க கண்ட்ரோல் தான்…!

Admin

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

Admin

Leave a Comment