சமூக ஊடகங்களில் வெளியாகும் உணர்ச்சிகரமான கருத்துகளை பார்த்து, வழக்குகளின் தீர்ப்பை முடிவு செய்துவிடக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
நீதிபதிகள் மத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் காணொலி முறையில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா சமூக ஊடகங்களில் உணர்ச்சிகரமான ஒரே கருத்தை பலர் பதிவிட்டிருந்தால் அது சரியாக இருக்கும் என்று உறுதிபடக் கூறிவிட முடியாது.
பொதுமக்கள் கருத்துக்கள் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானாலும் எது சரி எது தவறு என்பதை பிரித்தறியும் தன்மை சமூக ஊடகங்களுக்கு கிடையாது.
ஆகவே சமூக ஊடகங்களில் வெளியாகும் உணர்ச்சிகரமான கருத்துகளை பார்த்து, வழக்குகளின் தீர்ப்பை முடிவு செய்துவிடக் கூடாது என ரமணா கூறியுள்ளார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்