இன்று முதல் ரேஷனில் பொருட்கள் வாங்க மீண்டும் கைரேகை கட்டாயம்

SHARE

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை பதிவு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4000 இரு தவணைகளில் ரூ.2000 வீதம் மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது.

மேலும் ஜூன் மாதத்தில் 14 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.இதனைப் பெற பொதுமக்கள் நியாயவிலை கடைகளுக்கு வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.

அதேபோல் புதிய மின்னணு குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்த மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோரவேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது நிவாரண உதவித்தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரையும் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல்ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

Admin

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

ஆன்லைனில் கேம் விளையாடுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Admin

தோண்டத் தோண்டஅதிசயம்..கீழடி ஆய்வில் பழமையான கல் தூண் புதிதாக கண்டுபிடிப்பு!

Admin

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

Leave a Comment