Author: Admin

இந்தியாவில் தினசரி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டது. தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும் வகையில் மத்திய அரசு புதிய தடுப்பூசி கொள்கையை அமல்படுத்தியது. இந்த கொள்கை அமலுக்கு வந்த ஜூன் 21ம் தேதி மட்டும் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்து ஒருவாரம் மட்டுமே கடந்துள்ள நிலையில் தினசரி தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்றைய புள்ளிவிவரங்களின்படி நாடு முழுவதும் 27 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது ஜூன் 21ம் தேதி செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை ஒப்பிடும் போது 68 சதவீதம் குறைவாகும். இதனிடையே தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் பணியில் மத்திய அரசு…

Read More

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும் வகையில் மத்திய அரசு புதிய தடுப்பூசி கொள்கையை அமல்படுத்தியது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது தடுப்பு மருந்து விநியோகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது தகவல்களை பகிர்ந்து வருகிறார். தடுப்பூசி விநியோகம் இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜூலை மாதத்துக்கான தடுப்புமருந்து இன்னும் இந்தியா வந்து சேரவில்லை என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஹர்ஷவர்தன், ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கனவே தரவுகளை வெளியிட்டதாக தெரிவித்து, ராகுல் காந்திக்கு பிரச்னைதான் என்ன? அவர் அந்த தரவுகளை பார்க்கவில்லையா? திமிருக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது என்று காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Read More

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களி வைரலாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் “அண்ணாத்த” படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் நயன்தாரா, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனிடையே ரஜினி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Read More

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கும் அவா் அனுப்பிய சுற்றறிக்கையில், ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் தாக்கம் அடுத்த சில நாள்களில் தான் தெரியும் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் , மக்கள் கூடும் இடங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் வழக்கமானதை விட குறைவான மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும், கடந்த இரு நாள்களை விட அதிகமான எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தஞ்சாவூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புக்கு காரணம் என்ன, எந்த இடத்தில் இருந்து கொரோனா பாதிப்பு அதிகமாக பரவுகிறது என்பன குறித்த விவரங்களை…

Read More

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பல மாநிலங்களிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐக் கடந்தது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.99.80, டீசல் லிட்டருக்கு ரூ.93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து உள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13 க்கும், டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி நேற்றைய விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100ஆவது ஆண்டு விழா நேற்றுகொண்டாடப்பட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டையொட்டி நேற்று சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா நடந்தது. இதில் சுமார் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் ”சீன மக்களின் தேசிய இறையாண்மையும், ஒருமைப்பாட்டையும் அசாதாரண திறனையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. சீனாவின் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க நம்பகமான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன. சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை. நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம். சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம். சீனாவை யாரும் அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம். மேலும் தைவானை சீனாவுடன் இணைப்பது கட்சியின் வரலாற்று பணி என்றும் அதற்காக தேசிய…

Read More

டெல்டா வகை கொரோனாவின் ஆதிக்கம் இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு தற்போதுவெளியிட்டுள்ள தகவலின் படி உலகின் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது. ஆனாலும் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா எல்லா நாடுகளிலும் பரவும் என்பதைஉறுதியாகக் கூற முடியாது. காரணம் பல நாடுகளில் கொரோனா கண்டறிவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதால், கணக்கில் வராமல் டெல்டா வகை கொரோனா மக்களிடையே பரவிக் கொண்டிருக்கலாம். அதே சமயம்டெல்டா கொரோனாவின் வேகமும் தற்போது அதிகரித்து வருவதால், இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் அந்த வகைக் கரோனாவே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும். ஆகவே நம்மிடம் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவையே டெல்டா உள்ளிட்ட புதிய வகை கொரோனாவினை எதிா்கொள்ள போதுமானது என கூறியுள்ளது.

Read More

உடல் எடை குறைப்புக்கு வாயில் பொருத்திக்கொள்வது போன்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளனர் நியூசிலாந்தின் OTAGA பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.இந்தக் கருவியை வாயில் பொருத்திக்கொண்டால் 6 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே வாயை திறக்க முடியும்.ஆனால் பேசுவதற்கு எந்த தடையும் இருக்காது. இந்தக் கருவி பொருத்தப்படுவதால், திட உணவுப் பொருட்களை உட்கொள்ள முடியாமல், திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள முடியும். ஆகவே சில மாதங்களில் நீங்கள் மெலிந்த தேகத்தை பெறலாம் என OTAGA ஆய்வாளர்கள் அடித்து கூறுகின்றனர் மேலும் இந்த வாயைப் பூட்டும் கருவியினை சோதனை அடிப்படையில் பொருத்தியதில் இரு வாரங்களில் மூன்றரைக் கிலோ வரை எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதே சமயம் ஏராளமான இணைய வாசிகள் இந்த கருவியினை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். யார் கண்டது ஜிம்முக்கு போகாமல் உங்கள் உடல் எடையினை குறைக்க வேண்டுமா வந்து விட்டது வாய் பூட்டும் கருவி என விளம்பரங்களும் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

Read More

எம்ஜிஆரே என்னிடம்தான் கருத்து கேட்பார் என சசிகலா புதிய ஆடியோவில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களாக சசிகலா ஆடியோக்கள் அதிமுக கட்சிவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தற்போது சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோவில் எம்ஜியார் சில சமயம் என்னிடம் ஆலோசனை கேட்பார் – என்றும், நான் சொல்லும் ஆலோசனைகளை எம்ஜிஆர் கவனத்துடன் கேட்டு கொண்டு அதன்படி நடப்பார் – என்றும் கூறியுள்ளார் மேலும் இளம் வயதிலேயே அரசியல் அறிவோடு இருப்பதை பார்த்து எம்ஜியார் தன்னை பாராட்டி இருப்பதாக கூறும் ஆடியோ பதிவால் அதிமுக கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் ’விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்பார் சசிகலா அளந்து விடுவார்’ – என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதை விமர்சனம் செய்துள்ளார்.

Read More

கடந்த சில நாட்களாக உருமாறிய டெல்டா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் என்றும், இது இரண்டாவது அலை வைரசை விட மோசமானது என்றும் கூறப்பட்டது இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் இதுகுறித்து கூறிய போது டெல்டா வைரஸ் வகை வைரஸ் வேகமாக பரவும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார் மேலும்,டெல்டா வைரஸ் பரவும் வேகத்தை கணிக்க கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார் மேலும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக தொடர்ந்து பின்பற்றினால் புதிதாக உருவாகும் எந்த வைரஸில் இருந்தும் பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்

Read More