கடந்த சில நாட்களாக உருமாறிய டெல்டா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் என்றும், இது இரண்டாவது அலை வைரசை விட மோசமானது என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் இதுகுறித்து கூறிய போது டெல்டா வைரஸ் வகை வைரஸ் வேகமாக பரவும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்
மேலும்,டெல்டா வைரஸ் பரவும் வேகத்தை கணிக்க கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்
மேலும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக தொடர்ந்து பின்பற்றினால் புதிதாக உருவாகும் எந்த வைரஸில் இருந்தும் பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்