வாய்க்கு போடும் பூட்டு.. உடல் எடையை குறைக்க ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

SHARE

உடல் எடை குறைப்புக்கு வாயில் பொருத்திக்கொள்வது போன்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளனர் நியூசிலாந்தின் OTAGA பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.இந்தக் கருவியை வாயில் பொருத்திக்கொண்டால் 6 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே வாயை திறக்க முடியும்.ஆனால் பேசுவதற்கு எந்த தடையும் இருக்காது.


இந்தக் கருவி பொருத்தப்படுவதால், திட உணவுப் பொருட்களை உட்கொள்ள முடியாமல், திரவ உணவுகளை மட்டுமே உட்கொள்ள முடியும். ஆகவே சில மாதங்களில் நீங்கள் மெலிந்த தேகத்தை பெறலாம் என OTAGA ஆய்வாளர்கள் அடித்து கூறுகின்றனர்

மேலும் இந்த வாயைப் பூட்டும் கருவியினை சோதனை அடிப்படையில் பொருத்தியதில் இரு வாரங்களில் மூன்றரைக் கிலோ வரை எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.


அதே சமயம் ஏராளமான இணைய வாசிகள் இந்த கருவியினை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.


யார் கண்டது ஜிம்முக்கு போகாமல் உங்கள் உடல் எடையினை குறைக்க வேண்டுமா வந்து விட்டது வாய் பூட்டும் கருவி என விளம்பரங்களும் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

Admin

இறக்குமதி வரியை குறைத்தால் போதும் : மதன்கெளரிக்கும் விளக்கம் கொடுத்த எலான் மஸ்க்

Admin

நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்.. காரணம் என்ன?

Admin

அமேசான் சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து ஜெப் ஃபெசோஸ் விலகல்.. இதுதான் காரணமா.?

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

கமலா ஹாரீஸுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

அப்புறம் அடுத்த ஸ்கெட்ச் யாரு? : சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்பு பணம் …விரைவில் 3ம் பட்டியல்?

Admin

உடைந்த பாறை… உறைந்த மக்கள்… ஜப்பானை அச்சுறுத்தும் ஒன்பதுவால் நரி!.

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

Leave a Comment