- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
நூலிழை வித்தியாசத்தில் ஒருவர் உயிர் தப்புவது மிகவும் ஆச்சரியமான ஒன்று. அந்த வகையில் இரு பெண்கள் தங்களுடைய வாழ்வில் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பியுள்ளனர். ரஷ்யாவின் டாகெஸ்டான் பகுதியில் அமைந்துள்ள மலைப் பகுதியில் காஸ்பியன் கடலுக்கு மேல் ஒரு இடம் உள்ளது. இந்த இடம் ரஷ்யாவில் மிகவும் பிரசித்தி சுற்றுலா இடம். இந்த இடத்தில் வருபவர்கள் 6300 அடி உயரத்தில் இருந்து காஸ்பியன் கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த உயர்மான இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஊஞ்சல் வைத்து சிலர் ஆடியுள்ளனர். அந்த சமையத்தில் இரு பெண்கள் இந்த ஊஞ்சலில் ஏறி ஆடியுள்ளனர். பின்னே இருந்து ஒருவர் அந்த ஊஞ்சலை தள்ளிவிட்டு வந்துள்ளார். திடீரென அந்த ஊஞ்சலின் கயிறு எதிர்பாராத விதமாக அறுந்து உள்ளது. அப்போது ஊஞ்சலில் இருந்த இரண்டு பெண்களும் கீழே விழுந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக அங்கு ஒரு இருந்த…
ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சில்லறை நிறுவனமானது ரிலையன்ஸ் ரீடெய்ல். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் வர்த்தகத்தை தொடர்ந்து பல துறைகளில் விரிவாக்கம் செய்து வருகிறார் முகேஷ் அம்பானி. அதன் ஒரு பகுதியாக லோக்கல் சர்ச் இன்ஜின் மற்றும் விற்பனையாளர்கள் டேட்டாபேஸ் நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் சுமார் 3 ஆயிரத்து 947 கோடி மதிப்பிலான, 40.95% பங்குகளை ரிலையன்ஸ் ரீடெய்ல் வாங்கியுள்ளது. மேலும் 26 சதவீத பங்குகளை நிறுவன கைப்பற்றல் விதிகள் கீழ் செபி ஒப்புதல் அளித்த பின் வாங்க உள்ளதாகவும் ரிலையன்ஸ் ரீடைல் தரப்பில் தெரிவித்துள்ளது.
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபா மீதான வழக்கு தொடர்பாக அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு எடுத்த நிலையில் அவர்கள் தப்பியோடியது தெரியவந்துள்ளது . பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா. முன்னாள் மாணவிகள் 18 பேர் பாலியல் புகார் கொடுத்த நிலையில் அவர் மீது 3 போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இந்த நிலையில் சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது . வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகள் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்ட நிலையில் அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவெடுத்தது.அதன்படி சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது அவருக்கு ஆதரவான 5 ஆசிரியர்கள் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடியதாக தெரியவந்துள்ளது .
தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை நேற்று சென்னை கமலாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அண்ணாமலை, எல்.முருகன், சி.டி ரவி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருடைய சுய விவரத்தில் கொங்குநாடு என இடம்பெற்றிருந்தது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை பதிலளித்தபோது,தற்போது ட்விட்டரில் அனைவருமே தங்களுடைய அடையாளமாக பாண்டிய நாடு, சோழ நாடு, கொங்குநாடு என போட்டுக்கொள்கின்றனர். அதுபோல முருகனும் தமிழ்நாட்டிலிருந்து மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட ஒருவர்” என்று கூறினார். மேலும் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது, அவருடைய சுயவிவரக்குறிப்பில் கொங்குநாடு” எனக் குறிப்பிட்டிருந்தது தட்டச்சுப் பிழையேஇது விவாதத்திற்குரிய விஷயமே அல்ல என தனி விளக்கம் கொடுத்தார் தமிழக பாஜகவின் மாநில தலைவர்அண்ணாமலை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொங்குநாடு முழக்கத்தை பாஜக முன்னெடுத்திருக்கும் நிலையில், கைலாசா நாட்டிற்கு தனி யூனியன் பிரதேசமாக்க ஐ.நா.சபை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் சிக்கி பிரபலமான சாமியார் நித்யானந்தா தப்பி ஓடி கைலாசா என்ற தனி தீவை உருவாக்கி இணையம் வழியாக தனது பக்கதர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றார். அவ்வப்போது அவரது வீடியோவில் பரபரபான விஷயங்களை கூறி அதிர்ச்சி கொடுப்பார் சாமியார் நித்யானந்தா அந்த வகையில் தற்போது கைலாசா நாட்டுக்கு ஐ.நாவின் அங்கீகாரம் வாங்கவும் நித்தியானந்தா முயற்சித்து வருவதாக கூறியிருந்தார். தற்போது அந்த கைலாசாதீவுக்கு யூனியன் பிரதேசம் என ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவரது பக்தர்கள் தகவல் பரப்பி வருகின்றனர். ஐ.நாவின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு கைலாசா நாட்டினை அங்கீகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது உண்மைதான் என்று சொல்லும்படியாக வெளிவந்திருக்கிறது நித்தியானந்தாவின் வீடியோ. அந்த வீடியோவில் விவேகானந்தர் விரும்பினார், யோகா நந்தரும்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. அசுரன் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் சூர்யாவை நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கின்றார் வாடிவாசல் ,சி.சு செல்லப்பாவின் நாவலை அடிப்படியாக கொண்டு உருவாக்கபட்டுள்ள இந்த படம் ஜல்லிக்கட்டை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகின்றது. தனது அப்பாவைக் குத்திக் கொன்ற ஜமீன் வீட்டின் கம்பீரக் காளையை, அவர் மகன் வெறியோடும் வீரத்தோடும் அடக்கி, இறந்து போன தந்தையின் வாக்கைக் காப்பாற்றும் கதைதான் வாடிவாசல். தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவருகின்றார்படத்தின் வேலைகள் முடிந்தபின் வாடிவாசலில் நடிக்கவுள்ளார் இந்நிலையில் தயாரிப்பாளார் தாணு வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டிருந்தார். அதில் வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும் நம் வீரத்தையும்…
பாரதிய ஜனதாவையும் கண்டு அஞ்சும் காங்கிரஸ்காரர்கள் கட்சியைவிட்டு தாராளமாக வெளியேறலாம் என நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல்காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவை சேர்ந்த 3,500 உறுப்பினர்களிடம் காணொலிமூலம் பேசிய ராகுல் காந்தி காங்கிரஸிற்கு தைரியமான தலைவர்கள் கட்சிக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என கூறினார். அதே சமயம் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் காங்கிரஸிற்கு தேவையில்லை என்றும். அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நடந்துவரும் வன்முறைகளைசேகரிக்க சென்ற இந்திய புகைப்பட செய்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள மும்பையில் வளர்ந்தவர் டேனி சித்திக் பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார். இவர் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிய போது மக்கள் சந்தித்த துயரங்களை தனது புகைப்படத்தின் மூலமாக உலகிற்கு தெரிவித்தார். குறிப்பாக கங்கை கரைகளில் எரிக்கப்பட்ட பிணங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதனால் உலக சுகாதார மையம் தொடங்கி அனைத்து சர்வதேச ஊடகத்தின் பர்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பியது . இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான்களினால் நடக்கும் அரசியல் மாற்றங்களை செய்தியாக சேகரிப்பதற்கு அங்கு சென்றுள்ளார் டேனி சித்திக் அதிலும் குறிப்பாக தாலிபான்கள் கந்தகார் பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வருவதை மிகவும் நெருக்கமாக படம் பிடித்து உள்ளார். அதில் மூன்று நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பகுதியில்…
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடர்வதாக ஒரு சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார். திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தடை தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார் தமிழகத்தில், 25-3-2020 முதல் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது . தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது அனுமதி: நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி. இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதி. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிh .…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற 18ஆம் தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் கடந்த ஜூன் 17ஆம் தேதி முதன்முறையாக டெல்லி சென்றார். டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மேகதாது அணை, நீட் தேர்வு,புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். இந்நிலையில் வரும் 18ம் தேதி இரண்டாவது முறையாக முக ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் . இந்தச் சந்திப்பின் போது, மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு விலக்கு, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு, மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
